இறைவனைப் பற்றிக் கொள்:
"எனக்குள்ளதெல்லாம் உனதென்றே அளித்து விட்டேன். இனி நடுக்கடலில் மூழ்கிடினும் எனைக் கரையேற்றுதல் நின்திருவுளமே" என்ற நிலையில் ஒரு உண்மையான பக்தனாக இருந்து, இறைவன் எங்கும் பரவியிருக்கிறான் என்று தைரியமாக இறைவனை நம்பிவிட வேண்டும். இறைவன் எது செய்தாலும் அது உங்கள் நன்மைக்காகத்தான் என்று தெரிந்து கொள்கிற பக்குவம் உங்களுக்கு வர வேண்டும். அப்போது தான் இறைவன் உங்களிடம் வருவான். உங்களுக்கு செய்வதற்கு முன்பு உங்களை அலசிப்பார்க்க மாட்டானா?
இந்த நாட்டில் I.A.S. படிக்க வேண்டுமென்றால் M.A. படித்து முடித்து, பிறகு Competition Sucess Review எல்லாவற்றையும் படித்த பின்பு ஏதாவது ஒரு Institute-ல் training/coaching முடிந்த பிறகு தேர்வு எழுதி வெற்றி பெற்ற பின் interview-வில் pass செய்து கலெக்டராக வேண்டும். Afterall ஒரு கலெக்டராக வேண்டுமென்றால் இவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறதே, நீங்கள் இறைவனிடம் posting கேட்கிறீர்கள். நான் பரிட்சை எழுதாமல் கலெக்டர் ஆக வேண்டும் என்றால் எப்படி சாத்தியமாகும்?
நீங்கள் இறைவனுக்காக அழுகிற போது, உங்களுக்குப் பரிட்சை வைப்பான். அது தான் இந்த So called கஷ்டம். ஒரு உண்மையான பக்தனுக்கு சோதனைகள் வரும். தோல்விகள் கிடையாது.
நெருப்பில் வெகு தொலைவிலிருந்து கொண்டு குளிர் காய்ந்தால் இதமாக இருக்கும். சிறிது நெருங்கினால் தகிக்கும். அதிகமாக நெருங்கினால் அனலடிக்கும். ஒரு விறகு கட்டையை நெருப்பில் போட்டால், அது தணலாக மாறுகிற வரை எவ்வளவு கஷ்டப்படுகிறது. அந்த மாதிரி தூரத்தில் நின்று கொண்டு, ஊது பத்தி, கற்பூரம் காண்பிக்கிற வரை நன்றாக இருக்கும். இறைவனை சிறிது நெருங்க ஆரம்பித்தால் கஷ்டம் வரும். மிகவும் நெருங்க ஆரம்பித்தால் நிறைய கஷ்டங்கள் வரும். உங்களுடைய வாழ்க்கையில் நீங்களும் கூட இறைவனாகவே ஆகப் போகிற காலம் வரும்.
அப்போது சுண்ணாம்பு காளவாயில் உட்கார்ந்து கொண்டு, அப்பர் சுவாமிகள் மாசில் வீணையும் மாலை மதியமும் என்று பாடினாரே அந்த மாதிரி கஷ்டங்கள் வரும். அந்த நிலையில் நீங்கள் இறைவனை விடாமல் பற்றிக் கொள்ள வேண்டும். அப்பர் சுவாமிகள் அந்த நிலையிலும் ‘ஈசன் எந்தை இணையடி நீழலே’ என்று பாடியதால் தான், இன்றைக்கு அப்பர் சுவாமிகளை சிவன் கோவிலில் வைத்து வழிபடுகிறீர்கள். அப்பர் பெருமான் இறைவன் வேண்டாம் என்று கூறியிருந்தால் அவர் No-Upper; Lower-தான்.
இறைவனுக்காக எல்லாவற்றையும் இழக்கத் தயாராக இருந்தவர்களின் வரலாறுதான் உலகவரலாறு. எனவே, எந்த சூழ்நிலையிலும், இறைவனை விடாமல் பற்றிக் கொள்கிற பக்குவத்தை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.