பட்டினத்தடிகள் சொல்லுகிறார்,
‘இந்த உலகத்தில் ழூன்று விஷயம்தான் வேண்டும். வேறு எதுவும் வேண்டாம்’ என்று.
1) அரன் நாமம். சாமியுடைய பேர், சிவபெருமானுடைய பேர் மறக்கவே கூடாது. திருவண்ணாமலையில் ஒரு மகான் இருந்தார். விசிறி சாமின்னு பேர், யோகி ராம்சுரத்குமார் சாமிகள். எனக்கு ரொம்ப வேண்டியவர். என்னை வழிநடத்தியவர்களில் ரொம்ப தலையாயவர். அவர்கிட்டே ஒரு நாள் ஆங்கிலத்தில் கேட்டேன். அவருக்கு தமிழ் அவ்வளவாகத் தெரியாது. ‘அப்பா! நான் என்ன பண்ணணும்?’னு. அதுக்கு அவர் எனக்குக் கொடுத்த உபதேசம் ஒரே வரிதான். ‘கடவுளை எப்போதும் நினைத்துக் கொண்டிரு. ஒரு போதும் மறக்காதே’. எவ்வளவு அழகாக ஒரே வரியில் முடிந்துவிட்டது ஆன்மீகம். பட்டினத்தடிகள் அதைத்தான் சொல்கிறார், ‘கடவுளின் பெயரை மறக்காதே’. அருணகிரி பெருமான் முருகனிடத்தில் அதைத்தான் கேட்கிறார், "கருதா மறவா நெறி காண உன் இருதாள் வனஜம் தர என்றிசைவாய்". ‘முருகா! நான் உன்னை நினைக்கவும் கூடாது. மறக்கவும் கூடாது’. மறந்தால்தானே நினைப்பதற்கு. நினைக்கணும்னா மறக்கணும். ‘தாமரை போன்ற பாதங்களை எப்போது முருகா தரப்போகிறாய்?’ என்று கேட்கிறார்.
2) அடியார் உறவு. எப்பவும் நல்லவர்களுடைய கூட்டத்தில் இருக்கவேண்டும். உன் நண்பன் ஒரு குடிகாரன், கெட்டவனாக இருந்தால், ‘வாடா மச்சி’ன்னு உன்னையும் கூட்டிக்கிட்டுப் போய் ஒரு வழி பண்ணிடுவான். Always likeminded travellers in the spiritual path என்று சொல்வார்கள்.
3) அன்பு. அரன் நாமமும், அடியார் உறவும், அன்பும் அன்றி படிமீது வேறு பாங்கும் உளதோ. படின்னா பூமி. இந்த பூமியில் இந்த ழூன்று விஷயங்களைத் தவிர வேறு எதுவும் இல்லையென்று சொல்கிறார். இதெல்லாம் வாழ்வதற்கான specialities.
“