கல்லிலும், காகிதத்திலும், கடவுளைப் பார்த்துப் பழகிவிட்ட மக்களுக்கு உயிரோட்டமுள்ள மனித சரீரத்திலும் கடவுளைப் பார்க்க முடியும் என்பதை ஒத்துக் கொள்ள முடியவில்லை. கண்ணில் காட்ராக்ட் (புரை) வளர்ந்தவுடன் கண் மறைக்கிறது. அதை அகற்றியவுடன் கண் ஒளிபெறுவது போல், அஞ்ஞானம் என்ற திரையை தைரியமாக விலக்கிப்பார். ஞானம் பெறும் பாக்கியத்தைப் பெறலாம்.
காகிதத்தில் அச்சடிக்கப்பட்டது தான் என்று நன்றாகத் தெரிந்து கொண்டு, நீங்கள் வாங்கி வருகின்ற காலண்டரில் முருகனையும், பிள்ளையாரையும், கிருஷ்ணனையும், இயேசுவையும் பார்க்க முடிகிற உங்களால் ஏன் ஒரு உயிர்த்துடிப்புள்ள சரீரத்தில் தெய்வம் குடிகொண்டுள்ளது என்பதை நம்ப முடியவில்லை?