பானி பூரி

பானி பூரி செய்முறையைப் படிப்படியாகப் பார்க்கலாம். முதலில்
 
பூரி:

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 1 கோப்பை,
ரவை – 1 கோப்பை,
மைதா மாவு – 1 கோப்பை,
அரிசி மாவு – ½ கோப்பை,
பச்சை உளுந்த மாவு – ½ கோப்பை,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

எல்லா மாவுகளையும் உப்பு சேர்த்து ஒன்றாகக் கலந்து சிறிது தண்ணீர்(தேவையான அளவு) சேர்த்து கெட்டியாகப் பிசைந்து சப்பாத்திக்களாக இட்டு சிறு மூடியால் கத்தரித்து காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து வைக்கவும்.

மீட்டா செய்முறை :

புளி-ஒரு பெரிய எலுமிச்சையளவு,
 வெல்லம்- தேவையான அளவு,
உப்பு-தேவையான அளவு,
உலர்ந்த கர்ஜூரம் அல்லது பேரீச்சம்பழம்.

 புளியை சற்று சூடாக்கிப் பிழிந்து சாற்றை வடிகட்டிக் கொள்ளவும்.உலர்ந்த கர்ஜூரம் என்றால் விதைகளை நீக்கி சிறிது வேகவைத்துக் கொள்ளவும். கர்ஜூரம் அல்லது பேரீச்சம்பழம், வெல்லம் உப்பு சேர்த்து அரைத்து புளிக் கரைசலில் கரைத்துக் கொள்ளவும்.

கிரீன் சட்னி: ஒரு கட்டு புதினாவுடன் ஒரு கட்டுகொத்துமல்லியையும் சிறு துண்டு இஞ்சியையும், 4 பல், பூண்டும், சிகப்பு மிளகாய் இரண்டு, பச்சை மிளகாய் மூன்று, உப்பு, ஜீரகம் ஒரு தேக்கரண்டி எல்லாம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இந்த சட்னியில் இரண்டு தேக்கரண்டி எடுத்து பானியில் கலந்து விடவும்.

பானி செய்முறை:

 தேவையான அளவு வெல்லத்துடன் உப்பும், மூன்று எலுமிச்சையளவு புளியை ஊற வைத்துக் கரைத்து வடிகட்டி நீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.

சென்னா :

முதல் நாள் இரவு வெள்ளை கொண்டைக்கடலை அல்லது வெள்ளை பட்டாணியை தண்ணீரில் கழுவி ஊற வைத்து உப்பு போட்டு வேக வைக்கவும். அதை தாளித்து பச்சை மிளகாய்க்காரம் அல்லது மிளகாய்த்தூள், வாங்கிபாத் பொடி, எலுமிச்சம்பழ ரசம் சேர்க்கலாம். எல்லாவற்றையும் தயாராக செய்து வைத்துக் கொண்டு இப்போது பூரியின் நடுவில் ஒரு ஓட்டை போட்டு, அதில் அந்த வெள்ளை கொண்டைக்கடலை அல்லது வெள்ளை பட்டாணி மசாலாவை வைத்து பின் அந்த புளி நீரை உள்ளே ஊற்றி சாப்பிட வேண்டும். இப்போது சுவையான பானி பூரி ரெடி!!! சுவைத்து மகிழுங்கள்! மறவாமல் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author