பாசந்தி

தேவையான பொருட்கள் :

பால் – 2 லிட்டர்
சர்க்கரை – சுவைக்கேற்ப
குங்குமப்பூ – சிறிதளவு
ஊற வைத்து தோல் நீக்கிய பாதாம்பருப்பு – ஐந்து
முந்திரிப்பருப்பு – ஐந்து

செய்முறை :

ஒரு கனமான உருளியில் பாலை ஊற்றி காஸ் அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டிருக்க வேண்டும். ஒரு ஓட்டைக் கரண்டி (அ) ஸ்பூனில் ஆடையை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேகரித்துக் கொண்டு வரவும். பாதிப் பால் சுண்டும்வரை கொதிக்க வைக்க வேண்டும். குறுக்கிய பாலுடன் பாலில் கரைத்த குங்குமப்பூவைச் சேர்த்துக் கலக்கி ஆடையையும் சேர்த்து, சர்க்கரையும் சேர்த்து, மட்டான தழலில் வைக்கவேண்டும். சிறிது கொதி வந்ததும் எடுத்து ஒரு டப்பாவில் போட்டு குளிர் சாதனப் பெட்டியில் வைத்துவிடவேண்டும். பின்னர் தேவையான பொழுதுகளில் குளிர்ச்சியாக கப்புகளில் எடுத்துக் கொடுத்தால் அமிர்தமாய் இனிக்கும். ஊற வைத்து தோலை நீக்கிய பாதாம் பருப்பையும், முந்திரிப் பருப்பையும் மெலிதாக சீவி நெய்யில் வறுத்து, சேர்க்கவும். சாரைப் பருப்பையும் கூட நெய்யில் வறுத்து சேர்க்கலாம்.

About The Author