ஸ்டப்ட் பராத்தக்கள்:
தேவையான பொருட்கள்:
எல்லாவித கறிகாய்களையும் நன்றாகத் தோல் சீவி துருவிக் கொள்ளவும். மிளகுப்பொடி, உப்பு சேர்த்துப் பிசிறி வைக்கவும். பராத்தா தயாரிக்கும் மாவை தயாரித்துக்கொண்டு தடிமனான சப்பாத்தியின் நடுவே பூரணத்தை ஸ்டஃப் செய்தோ அல்லது மெல்லிய இரு சப்பாத்திகளாக திரட்டி இடையில் வைத்தோ ஸ்டப்ட் பராத்தாக்கள் செய்யவும்.
பைங்கன் பராத்தாக்கள்:
தேவையான பொருட்கள்:
சுட்ட கத்தரிக்காய் விழுதுடன் வறுத்த கடலைப்பருப்பு சிறிதளவு உளுத்தம்பருப்பு, சிறிதளவு புளி, வெல்லம், சிறிது தனியாப்பொடி, மிளகாய்ப்பொடி, சிறிது பெருங்காயப்பொடி, சுவைக்கு தேவையான உப்பு சேர்த்து மிக்சியில் மைய அரைத்துக் கடுகைத் தாளித்துக் கொட்டவும். பராத்தாக்களைத் தயாரித்துச் சுட்டெடுத்து அவற்றின் மீது தடவி இரண்டாக மடித்துப் பரிமாறவும்.
ஆம் பராத்தாக்கள்:
சிறிய துண்டு மாங்காயுடன் இரண்டு பச்சை மிளகாயுடன் சிறிது புதினா (அ) கொத்துமல்லித்தழை, சுவைக்கு உப்புச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொண்டு பராத்தாக்களைத் தயாரித்துச் சுட்டெடுத்து நடுவே தடவிக் கொடுக்கவும்.
N.B: இனிப்பு விரும்புபவர்கள் தக்காளி, அனாரஸ், மாம்பழம், ஆப்பிள், மாம்பழம் ஏதாவதொரு பழவிழுதுடன் சர்க்கரைச் சேர்த்துக் கலந்து, மாவுடன் கலந்து செய்யலாம். உப்பைக் குறைத்துச் சேர்க்கவும்.
“