மனோரம்ய பராத்தாக்கள்:
தேவையான பொருட்கள்:
கேரட் சிறியது – ஒன்று
பீட்ரூட் – சிறிய துண்டு
முள்ளங்கி, வெள்ளரிக்காய் – சிறியது 1
பச்சைமிளகாய் – 2
எல்லாவற்றையும் துருவி உப்புப் போட்டு பிசறி வைத்து, அரைமணி நேரம் கழித்துப் பிழிந்து எடுத்து காரம் சேர்த்து மாவில் போட்டுப் பிசையவும். (பிழிந்த நீரில் உப்புப் போட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்).
ஆனியன் பராத்தாக்கள்:
தேவையான பொருட்கள்:
வெங்காயம்- அரை கிலோ
பச்சை மிளகாய்-2
உப்பு – சிறிது
பொடியாக நறுக்கிய வெங்காயத் துண்டுகளை நறுக்கிய பச்சை மிளகாயுடன் எண்ணெய்விட்டுப் பொன்னிறமாக வதக்கவும். மேற்கூறிய முறைப்படி பராத்தா மாவைக் கலந்து, வெங்காயக்கலவையை உள்ளே வைத்து மடித்து பராத்தாக்களை சுட்டெடுக்கவும்.
டிரம்ஸ்டிக் பராத்தாக்கள்:
தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் – ஆறு
பச்சை மிளகாய் – 2
பொடியாக நறுக்கிய வெங்காயத்துண்டுகள் – அரை கப்
உப்பு சுவைக்கேற்ப.
முருங்கைக்காய்களை வேகவைத்து துண்டுகளின் விழுதை வழித்துத் தனியே வைக்கவும். அரை கப் வெங்காயத் துண்டுகளுடன், தேவைக்கேற்ப பச்சை மிளகாய் சேர்த்து எண்ணெயில் வதக்கிச் சற்று வேகவைத்து இறக்கவும். சற்று குளிரவைத்துச் சிறிது உப்புச் சேர்த்து மாவுடன் பிசைந்து பராத்தாக்கள் செய்யவும்.
சில்லி பராத்தாக்கள்:
தேவையான பொருட்கள்:
இடித்த பச்சை மிளகாய், பச்சை கொத்துமல்லி, இஞ்சி சேர்த்து அரைத்த விழுதுடன் எலுமிச்சை சாறும், உப்பும் சேர்த்து மாவுடன் கலந்து பராத்தாக்கள் செய்து சுட்டெடுக்கவும்.
“