சீஸ் பராத்தாக்கள்:
சப்பாத்தி மாவுடன் அரை கப் துருவிய சீஸுடன் மிளகுத்தூள் சேர்த்துப் பிசைந்து பராத்தாக்கள் தயாரிக்கவும்.
கட்டா பராத்தாக்கள்:
தேவையான பொருட்கள்:
புளித்த தயிர் – 1/2 கப்
பச்சை மிளகாய், இஞ்சி, கொத்துமல்லித் தழை மூன்றும் சேர்த்து இடித்த விழுது 2 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கு
சப்பாத்தி மாவுடன் விழுதைக் கலந்து கொண்டு தேவைக்கேற்ப நன்றாகச் சேர்த்துப் பிசைந்து பராத்தாக்கள் செய்யவும்.
பட்டர் பராத்தாக்கள்:
தேவையான பொருட்கள்:
வெண்ணெய் -100 gms,
மிளகு பொடி- சுவைக்கு
பராத்தா மாவை சீஸ் பராத்தக்களை தயாரிக்கும் முறையில் கலந்து பராத்தாக்கள் தயாரிக்கவும்.
பசுமைப்புரட்சி பராத்தாக்கள்:
கீரை வகைகளில் ஏதாவது ஒன்று (முருங்கைக் கீரை, வெந்தயக் கீரை), புதினா, தனியாப்பொடி 2 tsp, பச்சை மிளகாய், இஞ்சி விழுது எல்லாவற்றையும் மாவுடன் கலந்து பிசையவும். சப்பாத்திக்களாக சுடவும்.
மட்டர் பராத்தாக்கள்:
தேவையான பொருட்கள்:
உரித்த பட்டாணி -ஒரு கப்
பச்சை மிளகாய் -2
உப்பு – சுவைக்கு
செய்முறை:
உரித்த பட்டாணியை வேகவைத்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி மாவுடன் சேர்த்துப் பிசைந்து சப்பாத்திகளாக தயாரிக்கவும்.
“