பராத்தாக்கள் (2)

பூல் பராத்தாக்கள்:

பொடியாக நறுக்கிய (அ) துருவிய காலி ஃப்ளவரும், கோசும் சேர்ந்து -1/2 கப், மிளகுத்தூள் – 1/2 tsp, பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது. காலிஃப்ளவரில் உப்புக் கலந்து பிசைந்து வைக்கவும். அரைமணி நேரம் கழித்துப் பிழிந்து எடுத்து மற்ற பொருட்களைச் சேர்த்துப் பராத்தாக்கள் தயாரிக்கவும்.

ஆலு பராத்தாக்கள்:

உருளைக்கிழங்கு, மிளகாய்ப்பொடி – 1/4 tsp , தனியாப்பொடி – 1/4 tsp , சீரகப்பொடி – 1/4 tsp. உருளைக்கிழங்கை வேகவைத்து, மேல் தோலை உரித்துக்கொண்டு மசித்து மாவுடன் மற்ற பொருட்களைச் சேர்த்துக் கலந்து பராத்தாக்கள் செய்யவும்.

மூலி பராத்தாக்கள் :

முள்ளங்கி – 1/4 kg, பச்சை மிளகாய், இஞ்சி விழுது – அரை தேக்கரண்டி, முள்ளங்கியைத் துருவி உப்போடு பிசிறி வைக்கவும். அரைமணி நேரம் கழித்துப் பிழிந்து மாவோடு கலந்து பராத்தாக்கள் செய்யவும்.

மசாலா பராத்தாக்கள்:

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 1/4 kg
பட்டாணி – 50 kg, தக்காளி -2
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 10 பல்
வெங்காயம் – 1
மிளகாய்ப்பொடி – 1/4 tsp
மஞ்சள் பொடி – ஒரு சிட்டிகை
கரம் மசாலாப்பொடி – 1/4 tsp
உப்பு

செய்முறை: காய்கறிகளை நன்றாகக் கழுவிவிட்டுப் பொடியாக நறுக்கி வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயத்துண்டுகளைச் சேர்த்து வதக்கித் தக்காளியைச் சேர்த்து வதக்கிவிட்டுக் காய்கறிகளைச் சேர்த்து வதக்கிப் பொடியாக நறுக்கிய கொத்துமல்லி, கறிவேப்பிலையைச் சேர்த்துக் கிளறிவிட்டு உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு மாவுடன் சேர்த்துப் பிசைந்தோ, மாவின் நடுவே வைத்து stuff செய்தோ பராத்தாக்கள் தயாரிக்கவும்.

About The Author