படித்ததில் பிடித்தது (4)

வார்த்தை! – சில தத்துவங்கள்
பிறருடைய வார்த்தைகள்
உங்களது உற்சாகத்தை,
உங்களுடைய முயற்சியை
ஒருநாளும் குறைத்து விட முடியாது;
நீங்கள் அனுமதித்தாலொழிய!

*****

எண்ணங்களில் வாழப் பார்க்கிறோம்.
வார்த்தைகளில்தான் வாழ்கிறோம்.
செயலில் அல்ல.

*****

வாழ்க்கையின் எந்தத் துறையிலும்,
ஆன்மிகத்திலாகட்டும், பாலுறவிலாகட்டும்
வார்த்தைகளே நம்மைத் தூண்டுகின்றன.

–ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி

*****

எண்ணங்களில் கவனமாக இருங்கள்;
அவை வார்த்தைகளாக வெளிப்படுபவை!
வார்த்தைகளில் கவனமாக இருங்கள்;
அவை செயலாக வெளிப்படுபவை!
செயல்களில் கவனமாக இருங்கள்;
அவை பழக்கமாக மாறுபவை!
பழக்கங்களில் கவனமாக இருங்கள்;
அவை உங்கள் ஒழுக்கமாகின்றன!
ஒழுக்கத்தில் கவனமாக இருங்கள்;
அது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும்!

–ஓ.மில்லர்

–இன்னும் இருக்கிறது…

About The Author