பஞ்சாமிர்தம்

தேவையான பொருட்கள்:

பால் – 4 மேசைக்கரண்டி
தயிர் – 4 மேசைக்கரண்டி
நெய் – 1 மேசைக்கரண்டி
தேன் – 1 மேசைக்கரண்டி
சர்க்கரை – 2 தேக்கரண்டி
சில துளசி இலைகள்.

செய்முறை:

தயிரை நன்றாகக் கடையவும். அதனுடன் சர்க்கரையை சேர்த்துக் கலக்கவும். அதனுடன் பால், தேன் மற்றும் நெய் சேர்த்து நன்றாகக் கலந்து துளசி இலைகளை சேர்த்துப் பரிமாறவும்.

வீட்டில் நாம் செய்துகொள்ளும் பஞ்சாமிர்தம்

தேவையான பொருட்கள்:

வாழைப்பழங்கள் – 6
பேரீச்சம்பழங்கள் – 6
முந்திரிப் பருப்புத் துண்டுகள் – ஒரு மேசைக்கரண்டி
ஏலப்பொடி – அரை தேக்கரண்டி
நெய் – இரண்டு தேக்கரண்டி
தேன் – 2 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் – ஒரு மேசைக்கரண்டி
துருவிய வெல்லம் – ஒரு கப்,

செய்முறை:

பழுத்த வாழைப்பழங்களை மெல்லிய வில்லைகளாக நறுக்கவும். பேரீச்சம்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இவற்றுடன் மற்ற பொருட்களையும் சேர்த்துப் பிசைந்து வைக்கவும். பழனி பஞ்சாமிர்தம் போல் சுவைக்கும். மலைப்பழங்களை உபயோகித்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

About The Author