பங்குச் சந்தை

பரபரவென பத்தாயிரம்.!
இமைப் பொழுதில் இருபதாயிரம்.!!
வெள்ளி மணி கட்டி விரட்டப்பட்ட காளைக்கு,
ரத்தத் திலகமிட்ட இந்திய ஏழைகள்!!

போகும் வழி தெரியாத பலநாட்டுக் கலப்பினக் காளைக்கு
எதிர்கொண்ட எண்ணை தடவிய கரடியை
எதிர்கொள்ளத் தெரியாமல் இடர்பட்டு வீழும்போது
அறுத்தெறிந்த வெள்ளி மணியின் கீரலில்,
ரத்தம் தெறித்தது என்னவோ ஏழைகளின் வீட்டில்!

பசி என்று கேட்டால் ‘ப.சி’ சொல்லுவதோ
பொறுத்திருந்து புசி என்று!!

எஞ்சிய எண்ணிக்கையை பொன் மணியில் போட்டு,
அஞ்சுகிற மக்கள் எதிர்பார்ப்பது என்னவோ
அடுத்த மஞ்சுவிரட்டை நோக்கித்தான்!?

About The Author

6 Comments

  1. VAI. GOPALAKRISHNAN

    பங்குச்சந்தை கவிதை” காலத்திற்கேற்ற அருமையானதோர் படைப்பு.
    புதிய படைப்பாளர் திரு. கணேஷ் அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள். தமிழ்ச்செடியில் பூத்துள்ள புதிய மலரின் அழகும் மணமும் வாசகப்பெருமக்களை தொடர்ந்து மகிழச்செய்யட்டும்.
    வாழ்த்துக்களுடன் வை.கோபாலகிருஷ்ணன், திருச்சி, தமிழ்நாடு,இந்தியா.”

  2. A.M.BADRI NARAYANAN..

    பசி என்று கேட்டால் ‘ப.சி’ சொல்லுவதோ
    பொறுத்திருந்து புசி என்று!!”

    அரசியல்வாதிகளை அறிந்தவர்கள், இந்த வரிகளை புரிந்துக் கொள்வார்கள். “நெத்தியடி”. சபாஷ்! கணேஷ்!!

    -தவப்புதல்வன்.

  3. uma

    வெகு அருமை. உணர்வுபூர்வமான வரிகள். வாழ்த்துக்கள்.

  4. subbu

    அருமையான கவிதை,மெலும் புது கவிதை தொடரட்டும் !! வாழ்துக்கல்; ஸுப்பு,டுபை

Comments are closed.