பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தேன். நமக்கு வேண்டிய பஸ் என்றுதான் சரியான நேரத்திற்கு வந்துள்ளது. எப்போதும் போல் பஸ்ஸுக்காகக் காத்திருந்தேன்.
வெளியில் கொளுத்தும் வெயில் வேறு. அவசரமாக செல்ல வேண்டிய நிர்பந்தம் வேறு.
டர்ரென்று ஓசை எழுப்பிக் கொண்டு வந்தது ஒரு ஆட்டோ.
‘எங்க சார் போகணும்’ என வினவினான் ஆட்டோக்காரன்.
மயிலாப்பூருக்கு என்றேன் நான்.
‘சரி வாங்க போயிடலாம்’; மீட்டருக்கு மேலே ஐந்து ரூபாய்’ என்றான் ஆட்டோக்காரன்.
‘மீட்டருக்குக் கொடுப்பதே கட்டுபடியாகாதே. மீட்டருக்கு மேலே வேறயா’ என்று நினைத்து பதில் பேசாமல் இருந்து விட்டேன்.
அவசரத்துக்குப் போகணும்னாகூட கணக்கு பார்ப்பீங்க போலிருக்கு என்றவாறு அரைசுருதியிலே விசும்பினான் ஆட்டோக்காரன்.
சொல்லிக்கொண்டிருக்கும் போதே காணாததைக் கண்டதைப் போல எனக்கு ஓர் உற்சாகம்.
வந்ததே நான் ஏற வேண்டிய பஸ்!
மெத்தனமாக ஆட்டோக்காரனைப் பார்த்துக்கொண்டே அவனை ஜெயித்ததுபோல் நினைத்து விறுவிறுவென்று பஸ்ஸில் எறினேன்.
‘டிக்கெட் டிக்கெட்’ அறைகூவல் கண்டக்டரிடமிருந்து.
ஐந்து ரூபாய் கொடுத்து மயிலாப்பூருக்கு டிக்கெட் வாங்கினேன்.
கொஞ்சம் தூரம் தான் போயிருக்கும். ‘புஸ்’; என்றது பஸ்ஸின் பின்புற டயர்.
பஸ்ஸிலிருந்து இறங்கினேன். அடுத்த பஸ் இப்போதைக்கில்லை.
‘அய்யா வாங்க என்று அழைத்தான் என்னை அதே ஆட்டோக்காரன்’.
யாரையும் அலட்சியப்படுத்தக் கூடாது என்பதனை உணர வைத்ததிர்க்க்கு நன்றி.
எல்லாமே நேரம் தான்…….. நன்றாக இருக்கு நேரமும் தான் பாசந்திக்கு
மிகவும் அருமையான சிறுகதை.
ஆட்டோகாரனுக்கு யோகம், பாசந்திக்கு நேரம்
னெரமட சாமி நல்லா இருக்கு
தேர்தல் நேரம் வாக்கு சீட்டு இருப்பவர்களுக்கும் நேரம் தான்
னேரமகும் முன்ன முந்திக்குஙோ
கதை மிகவும் அருமை. எனகு தெரின்து இது இவருடைய முதல் கதை சுபெர்ப். இக்தன் மொரல் எது எது எப்ப நடக்குமொ அது அது உரிய நெரதில் நடக்கும் எல்லம் விதி படி நடகும் என்பது இஅதன் எதன் சா
ரம்சம்.
கருதோவியம் இரண்டு அற்புதம்… வலர்கதங்கள் பணி….வாழியவேபல்லாண்டு!
படிக்கத் தூண்டும் விறுவிறுப்பான சிறுகதை. பாசந்திக்கு வாழ்த்துக்கள்
மிகவும் அருமையான, அழகான, எதார்த்தமான கதை
யதார்தமான சிறுகதை
மன்னை பாசந்தியின் நேரம். ஆட்டோக்காரனுக்கு யோகம்.
உம்ம டைம் நல்லா Wஒர்கிங்.
உங்கல் பனி தொடரட்ம் வத்துகல்