நெல்லிக்காய் துவையல்

முதல் வகை:

தேவையான பொருட்கள் :

பெரிய நெல்லிக்காய்கள் – எட்டு
உளுத்தம்பருப்பு – இரண்டு மேசைக்கரண்டி
சிகப்பு மிளகாய் – ஐந்து
புளி – சிறிது
கறிவேப்பிலை – ஒரு பிடி
தேங்காய்த்துருவல் – இரண்டு மேசைக்கரண்டி
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப,
கடுகு – தாளிப்பதற்கு.

செய்முறை:

வாணலியில் எண்ணெயைக் காய வைத்து உளுந்து, மிளகாய் வற்றல், தேங்காய்த்துருவல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். நெல்லிக்காய்களை நன்றாகக் கழுவிக்கொண்டு ஆவியில் வேகவைத்த பின் கொட்டையை நீக்கிக் கொள்ளவும். உப்பு, புளியுடன் எல்லாவற்றையும் சேர்த்து துவையலாக அரைத்துக் கொள்ளவும். இட்லி, தோசை, சாம்பார் சாதம், தயிர் சாதம் எல்லாவற்றிற்கும் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

*******************

இரண்டாம் வகை:

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய்கள் – பத்து
மிளகு – அரை தேக்கரண்டி
ஜீரகம் -அரை தேக்கரண்டி
சிகப்பு மிளகாய் – ஆறு
சிறிது பெருங்காயம்
மஞ்சள் பொடி – ஒரு சிட்டிகை
சுவைக்கேற்ப உப்பு, சிறிது வெல்லம், தேவையான எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை.

செய்முறை:

நெல்லிக்காய்களைக் கழுவி ஆவியில் வேகவைத்துக் கொள்ளவும். பிற பொருட்களை அரைத்துக் கொண்ட பின் வேக வைத்த நெல்லிக்காயையும் உடன் அரைத்துக் கொள்ளவும். எண்ணெயை சுட வைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை சேர்த்து பத்து நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

*******************

About The Author