நெல்லிக்காய் – 1 கிலோ
சர்க்கரை – 1 கிலோ
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – அரை தேக்கரண்டி
சுக்குத்தூள் – ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் – ஒரு தேக்கரண்டி
ஏலப்பொடி – அரை தேக்கரண்டி
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
செய்முறை :
நெல்லிக்காய்களைக் கழுவி ஒரு துணி மீது உலர வைத்து துருவிக் கொள்ளவும். அதனுடன் உப்பும், மஞ்சள் பொடியும் சேர்த்துப் பிசறி ஒரு மணி நேரம் வைக்கவும். பின்னர் அதை நன்றாகப் பிழிந்து கொள்ளவும். பிழிந்த நீரை ஒரு பாத்திரத்தில் சேமித்து வைக்கவும்.
ஒரு கடாயில் சர்க்கரையுடன் சிறிது நீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைத்துக் கொள்ளவும். சர்க்கரை நன்றாகக் கரைந்து ஓ¡¢ழை பாகு வந்த பின் துருவிய நெல்லிக்காயை சேர்த்துக் கை விடாமல் கிளறி மிளகுத்தூள், சுக்குத்தூள் மற்றும் ஏலப்பொடி சேர்க்கவும்.
பிறகு, குங்குமப்பூ சேர்த்துக் கிளறி ஜாம் பதமாக வரும் வரை பத்து பதினைந்து நிமிடங்கள் கலந்து இறக்கவும்.
இட்லி, தோசை, சப்பாத்தி, ப்ரெட் உடன் தொட்டுக்கொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். தனியே இனிப்பாகவும் உண்ணலாம். உடலுக்கு ஆரோக்கியமானது.”
நெல்லிக்காய் ஜாம் குறிப்பு நன்றாக இருந்தது. ஒரு சந்தேகம் இதில் கூறியபடி புளிப்பாக இருக்கும் அரி நெல்லிக்காய் உபயோகிக்க வேண்டுமா இல்லை நெல்லிக்கனி உபயோகிக்க வேண்டுமா. நெல்லிக்கனி நல்ல மருத்துவ குணங்கள் உள்ளது. அரி நெல்லிக்காய் உபயோகித்தால் நிறைய சர்க்கரை போடவேண்டும் இல்லையென்றால் புளிப்பை குறைக்கமுடியாது. நீலகன்டன், மும்பை