வைட்டமின் c நிறைந்த மலை நெல்லிக்காய்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தவை. நம் தினசரி உணவில் அவற்றை சட்னி, துவையல், ஊறுகாய், ஜாம் எனப் பலவகைகளில் பயன்படுத்திப் பயன் பெறலாம்.
நெல்லிக்காய் சட்னி செய்முறையை இங்கே காணலாம். வரும் வாரங்களில் இதர வகைகளையும் காண்போம்.
நெல்லிக்காய் சட்னி
முதல் முறை :
தேவையான பொருட்கள் :
நெல்லிக்காய்கள் – ஆறு
பச்சை மிளகாய் – நான்கு
இஞ்சி – ஒரு சிறு துண்டு
சுவைக்கு – தேவையான உப்பு
தேங்காய்த்துருவல் – 1/4 கப்
தாளிக்க – எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு
செய்முறை:
நெல்லிக்காய்களை நன்றாகக் கழுவிக் கொ¡ண்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொண்டு, பச்சை மிளகாயைத் துண்டுகளாக்கிக் கொள்ளவும். மிக்சியில் நெல்லிக்காய்களுடன் பச்சை மிளகாயையும், இஞ்சித் துண்டுகளையும், தேங்காய்த் துருவல், உப்பையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இறுதியில் கடுகு, உளுத்தம்பருப்பைத் தாளித்துக் கொட்டவும்.
இரண்டாம் முறை :
தேவையான பொருட்கள் :
நெல்லிக்காய்கள் – பத்து
பச்சை மிளகாய்கள் – ஐந்து
தேங்காய்த்துருவல் – இரண்டு மேசைக்கரண்டி
உப்பு – சுவைக்கேற்ப
தாளிக்க – எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை
செய்முறை:
கழுவிய நெல்லிக்காய்களையும், பச்சை மிளகாய்களையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். எண்ணெயைக் காய வைத்து நறுக்கிய நெல்லிக்காய் துண்டுகளைப் போட்டு வதக்கவும். பின் பச்சை மிளகாய் துண்டுகளையும் சேர்த்து வதக்கவும். அதன்பின் தேங்காய்த் துருவலையும் சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். வதக்கிய கலவையை அரைத்துக் கொள்ளுங்கள்.
சுவையான நெல்லிக்காய் சட்னி தயார். தோசை, சாம்பார் சாதம், தயிர் சாதம் எல்லாவற்றிற்கும் பயன்படுத்திப் பாருங்கள். அருமையாக இருக்கும்.
“
சுவையாக இருக்குமா அதெர்கும் செதுபர்கிரென்