தேவையானபொருட்கள் :
நெல்லிக்காய்- 1/4 k.g
புளி- சிறு எலுமிச்சையளவு
மிளகாய்த்தூள்- 1 1/2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
மஞ்சள்பொடி – 1/2 தேக்கரண்டி
வெல்லம்- சிறிது
நல்லெண்ணெய்- தேவையான அளவு
கறிவேப்பிலை,கடுகு – சிறிது.
செய்முறை:
நெல்லிக்காய்களை ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். கொட்டைகளை நீக்கி பல்லுகளாக்கிக் கொள்ளவும். கனமான வாணலியில் எண்ணெயை சூடாக்கி கறிவேப்பிலை, கடுகைத் தாளித்து, புளியை கெட்டியாகக் கரைத்து சற்று கொதித்ததும் உப்பு, மிளகாய்த்தூள், வெல்லம், மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்கவிட்டு நெல்லிக்காய்களை சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். குளிர்சாதனப்பெட்டியில் வைத்து ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம்.
“