நீ உடனிருந்த போது உலகைப் பார்த்து
நான் உரைத்தேன்:
"என்னவள் மட்டும் போதும்;
உலகெனக்கு வேண்டாம்" என்று.
நீ என்னை உதறிவிட்டுச் சென்ற பிறகு
உலகு என்னைப் பார்த்து உரைக்கிறது:
"அதோ போகிறான் பார்,
பைத்தியக்காரன்" என்று.
பூவிதழ்களில் எல்லாம்
தீ சுட்ட வடுக்கள்;
ஆம், என் நெஞ்சமெனும்
பூவிதழ்களில் எல்லாம்
நீ சுட்ட வடுக்கள்;
மூங்கிலில் துளை செய்தால்
புல்லாங்குழல் ஆகும்.
நீயோ, குழலையே துளைத்து
இசை வேண்டுமென்கிறாய்,
எப்படி இது சாத்தியம்?
கையிலே சுமை இருந்தால்
இறக்கி வைக்க வழியுண்டு;
நெஞ்சத்தின் சுமைகளை
இறக்கி வைக்க வழி ஏது?
உன்
நினைவென்னும்
மூட்டைகளின் பாரம்
அழுத்துகையில்
வாழ்க்கை நதியை
நான்
கடப்பது
எப்படி?
கவிதை அருமை
really it was too good especially the mans crying about her memories was too hurting , my eyes filled with tears
very nice….