நூதன பாயசம்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – ஒரு கப்
பொட்டுக்கடலை – அரை கப்
இளசான தேங்காய் – ஒரு கப்
முந்திரிப்பருப்பு – 5
ஏலக்காய் – 2
பேரிச்சம்பழம் – மிகவும் பொடியாக நறுக்கியது – ஒரு கப்
வெல்லம் – 1/4 கிலோ
கெட்டியான பால் – 1/2 லிட்டர்.

செய்முறை:

ஒரு கப் பாலில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து அரிசி (கழுவிய பிறகு), முந்திரிப் பருப்பு, பொட்டுக்கடலை, தேங்காய் முதலியவற்றை ஒன்றாக வேக விட்டு நைசாக அரைக்கவும். வெல்லத்தை நீர் சேர்த்துப் பாகு வைத்து வடிகட்டிக் கொள்ளவும். அரைத்த விழுதை வேக வைத்து பச்சை வாசனை போனவுடன் வடிகட்டிய வெல்லப் பாகை விட்டுக் கொதிக்க விடவும்.

பொடியாக நறுக்கிய பேரிச்சம் பழத்தைப் பாலில் ஊற வைத்து ஏலப்பொடியைக் கலந்து பாயசத்துடன் கலக்கவும். சற்றுக் கொதித்தவுடன் இறக்கி வைத்துப் பரிமாறும்போது பால் கலந்து பரிமாறவும். கெட்டியாக அல்வா மாதிரியும் பரிமாறலாம். பால் சேர்த்துப் பாயசமாகவும் பரிமாறலாம். பொட்டுக்கடலை, பேரிச்சம்பழம் இவைகள் எல்லாம் கலந்து நூதனமாகவும் சுவையாகவும் இருக்கும்.

About The Author

1 Comment

Comments are closed.