நீ, உன் ரகசியம் மற்றும் நான்

பேசாமல் படுத்துக்கிடக்கிறாய்
வாயில் விஷம்தேக்கிய கொடிய நாகமாய்

நானே நெருங்கவேண்டியிருக்கு உன்னை
உன் விஷம்பற்றிய கவலையற்று

அவ்வப்போது பொட்டென
கொத்தியும்விடுகிறாய்
என்றபோதிலும்
உன் கொடிய விஷத்துக்கும் நான்
செத்துப்போவதில்லை

*****

எல்லாவற்றையும்
மீண்டும்மீண்டும் தொடங்கவேண்டியிருக்கு
அப்படி என்னதான் வைத்திருக்கிறாய்
உன்னுள்?

(‘சாட்சியாக…’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author