பிரபஞ்சம்
பேரமைதியில்
உறைந்துகிடக்க
நீயோ
சர்வசதா காலமும்
சலசலத்திருக்கிறாய்
இடைவெளியேதுமற்று
காலநேரமற்று
இடம் பொருளற்று
அர்த்தமும் ஆனந்தமுமற்று
ஏதுமற்றுப் புலம்பிப் பிதற்றுதலே
உன் வாழ்வின் வரையறையாச்சு
இல்லாததைக்
கற்பிதமிட்டுக் குதூகலித்தல்
உன் நாகரீகமாச்சு
உன்னுள் அடிக்கடி முகிழ்க்கும்
எதுக்கு இதெல்லாம் என்ற
உன் பழைய
கேள்வியும் போச்சு
எக்கணத்திலும்
அரங்கேறக் கூடும்
உன் மரணத்தின் பேச்சுக்கள்
அப்போது நீ கற்பிதமிட்டதெல்லாம்
காற்றின் வழியே
போயே போகும் போ!