காற்று கலைத்துவிட்ட புத்தகம் போல்
காலை கரைத்துவிட்ட கனவின் உச்சம் நீ!
எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும்
எந்திர வாழ்வின் அடிநாதமாய் நீ!
தனிமையிலும் தாங்க முடியா துயரிலும்
தங்கி இளைப்பாறும் தாய்மடி நீ!
தொலைபேசியின் தொடர்ச்சியான அழைப்புகள்…
தொலைத்தூர பயணத்தின் துணை வரும் பெண்ணொருத்தி…
‘டேய்!’ எனச் சொல்லி அழைக்கும் நண்பன்…
‘டா’ போட்டு அதிகாரம் செய்யும் தங்கை என
ஏதோ ஒன்று எப்போதும் உன்னையும்
என்னையும் உயிராய் இணைக்கிறது.
நான் இருப்பினும் இறப்பினும் தொடரும்
நினைவுச் சங்கிலி அறுவது எப்போது?
கவிதா பிரகாஷ் அவர்களின் நினைவுச் சங்கிலி கவிதை நினைவில் நீங்காதது. மிகவும் அருமை
நன்றி கண்மணி