நான்கு கவிதைகள்

1.

கவிதை எழுவதாக நினைத்துக்கொண்டிருந்தபோது
தாளில் வந்து விழுந்தது குப்பை

எழுதுவதை விட்டுவிட முனைந்தபோது
உள்ளெழும்பியது புகை

அதுவாக எல்லாம் அடங்கிய க்ஷணத்தில்
முளைவிட ஆரம்பிக்கிறது
கவிதை என்று தன்னை காட்டிக்கொள்ளாததொரு
புதிர்க்கவிதை
அதீதமாய்!

2.

அதீதா
நின்னை நான் முற்றாக மறந்துவிட்டிருந்த
க்ஷணத்தில்
என்னில் முளைவிட்டிருக்கிறாய்
என்னுள் நானாய்…

இதை உன்னிடம்
சொல்வதுகூட மடமை என்பதும்
இதைச் சொல்லும் இந்த க்ஷணத்தில்தான்
புரிகிறது
என்செய்வேன் நான்?

3.

அதியற்புத நிகழ்வுதான்
எனக்கு:
உன்னில் நான் கலந்து
உ(எ)ன்னை மறந்தது!

4.

இசைந்திரு(க்கிறாய்) என்னுள்
ஊடுபாகாயுமன்றி
ஊடுசுவையாயுமன்றி
ஊனுயிராய்!

About The Author

1 Comment

Comments are closed.