நாட்டுக்காய்கறிக் குழம்பு

அறுவடையான புத்தம்புது நாட்டுக் கறிகாய்களை வைத்து தயாரிக்கும் குழம்பு பால் பொங்கலுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

உரித்த மொச்சைக்காய் – அரைக்கிலோ
சர்க்கரைவள்ளிக்கிழங்கு – அரைக்கிலோ
பரங்கிக்காய் எனப்படும் சிகப்பு பூசணிக்காய் -அரைக்கிலோ
பச்சை நிலக்கடலை உரித்தது 1/2 – கப்
அவரைக்காய் – அரைக்கிலோ
பச்சை மிளகாய் –ஆறு
புளி – எலுமிச்சையளவு
ரச மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
கல் உப்பு – ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
கடுகு – ஒரு தேக்கரண்டி
புதிய வெல்லம் – சிறிது

செய்முறை:

ஒரு கனமான பாத்திரத்தில் கால் பாகத்திற்கு நீரை சூடாக்கி காய்கறிகளை நன்றாகக் கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கி வேக வைக்கவும். உரித்த மொச்சை விதைகளையும், நிலக்கடலையையும், நறுக்கிய அவரைக்காய் துண்டுகளையும் சேர்த்துப் பதமாக வேகவைத்து பச்சை மிளகாய்களை நுனியில் பிளந்து காய்கறியுடன் சேர்த்து புளிக்கரைசலையும, உப்பும், ரசமிளகாய் தூளையும் சேர்த்து சிறிது வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிட்டு கறிவேப்பிலை சேர்த்து கடுகைத் தாளித்துக் கொட்டவும்.

பகாளாபாத் எனப்படும் தயிர் சாதம் :

பால் பொங்கலை தேவையான அளவு தயிருடன் கலந்து கறிவேப்பிலை,பச்சை மிளகாய் துண்டுகளைச் சேர்த்துக் கடுகைத் தாளித்தால் சுவையான பகாளாபாத் தயார். மாங்காயைத் துருவியோ (அ) துண்டுகளாக்கி ஊறுகாய் தயாரித்தோ உண்டால் சுவையோ சுவை.

About The Author