நவக்கிரகங்கள் (25)

ராமாயண பாராயணமும் கிரக தோஷ நிவர்த்தியும்

வால்மிகி ராமாயணத்தில் குறிப்பிட்ட சில ஸர்க்கங்களைப் பாராயணம் செய்வதன் மூலம் கிரக தோஷங்களால் ஏற்படும் கெட்ட பலன்களை நீக்கி விட முடியும் என்பது பெரியோர்களின் கருத்து.

உமா சம்ஹிதை என்ற அறிய நூலில் வால்மீகி ராமாயணத்தில் எந்தெந்த ஸர்க்கம் படிப்பதன் மூலம் எந்தெந்த தோஷங்களை விலக்கிக் கொள்ளலாம் என்ற குறிப்பு காணப்படுகிறது.

மகா தசைகள் விவரம்:

சூரிய தசை -6 வருடங்கள்
சந்திர தசை -10 வருடங்கள்
செவ்வாய் தசை -7 வருடங்கள்
ராகு தசை -18 வருடங்கள்
குரு தசை -16 வருடங்கள்
சனி தசை -19 வருடங்கள்
புத தசை -17 வருடங்கள்
கேது தசை – 7 வருடங்கள்
சுக்கிர தசை -20 வருடங்கள்

சந்திர தசையில் எற்படும் தோஷம் நீங்க

சுந்தர காண்டம் 5வது ஸர்க்கத்தை பாராயணம் செய்ய வேண்டும்.

செவ்வாய் தசை குரு புத்தி கெட்டிருந்தால்

சுந்தர காண்டம் 51வது ஸர்க்கத்தை பாராயணம் செய்ய வேண்டும். ராவணனுக்கு ஹனுமார் உபதேசம் செய்வதை சொல்லும் ஸர்க்கம் இது.

செவ்வாய் தசை சுக்ர புத்தி கெட்டிருந்தால்

சுந்தர காண்டம் 51வது ஸர்க்கத்தை பாராயணம் செய்ய வேண்டும், ராவணனுக்கு ஹனுமார் உபதேசம் செய்வதை சொல்லும் ஸர்க்கம் இது.

ராகு தசை சுக்ர புத்தி கெட்டிருந்தால்

சுந்தர காண்டம் 65 வது ஸர்க்கத்தை பாராயணம் வேண்டும். ஹனுமார் ஸ்ரீ ராமருக்கு சூடாமணியைக் கொடுத்ததைக் குறும் ஸர்க்கம் இது.

ராகு தசை சனி புத்தி கெட்டிருந்தால்

சுந்தர காண்டம் 47 வது ஸர்க்கத்தை பாராயணம் செய்ய வேண்டும். ஹனுமார் அட்சனை வதம் செய்வதைக் கூறும் ஸர்க்கம் இது.

குரு தசை கடுமையான இருந்தால்

சுந்தர காண்டம் முதலாம் ஸர்க்கத்தை பாராயணம் செய்ய வேண்டும். ஹனுமார் சமுத்திரத்தைத் பாராயணம் செய்ய வேண்டும். ஹனுமார் சமுத்திரத்தைத் தாண்டியதைக் கூறும் ஸர்க்கம் இது.

குரு தசை கேது புத்தி கெட்டிருந்தால்

சுந்தர காண்டம் 61 மற்றும் 62 வது ஸர்க்கங்களை பாராயணம் செய்ய வேண்டும். மது வனம் அழிந்ததைக் கூறும் ஸரக்கங்கள் இவை.

சனி தசையில் ஏற்படும் கெட்ட பலன்களை நீங்க

சனைச்சரஸ்ய துஷ்டாசேத்
தசாராக்ஷஸ நாசனம்
விஸ்வாமித்ரா த்ரா தவரே ஸர்க்கம்
படேத் பூர்வம்து போஜனாத்
பாடகாலே பாவென் மெளநீ
கருணுயாதபி தாத்ருச
ம்ருத்யுஞ்ஜயாய பாடாந்தே
திலான்னம் வினிவேதயேதர்

கருத்துரை:-

சனி பகவானின் தசா காலத்தில் கெடுதல்களைத் தவிர்த்து நன்மைகளைப் பெற ஸ்ரீமத் ராமாயணத்தில் பாலகாணடத்தில் விஸ்வாமித்ரரின் யாக சமரக்ஷண சமயத்தில் ஸ்ரீ ராமன் செய்த ராக்ஷக ஸம்ஹாரத்தைக் கூறும் 30 வது ஸர்க்கத்தை ஆகாரம் செய்யும் முன் தினந்தோறும் தவறாமல் பாராயணம் செய்ய வேண்டும். பாராயணம் பொழுது யாருடனும் பேசக் கூடாது. (பேச நேர்ந்து விட்டால் மறுபடியும் சரக்க ஆரம்பத்திலிருந்து படிக்க வேண்டும்) சிரவணம் செய்தாலும் அதாவது பிறர் படிக்கக் கேட்டலும்- பிறருடன் பேசக் கூடாது. பாராயணம் முடிந்தவுடன் ம்ருத்யுஞ்ஜரான சிவனுக்கு எள் கலந்த அன்னத்தை நிவேதனம் செய்ய வேண்டும். இவ்விதம் செய்து வந்தால் சனி பகவானின் தசா காலத்தில் இன்னல்கள் நீங்கி இன்பம் ஏற்படும்.

சனி தசையில் சனி புத்தி கெட்டிருந்தால்

சுந்தர காண்டம் 48 வது ஸர்க்கத்தை பாராயணம் செய்ய வேண்டும். ஹனுமான் பிரம்மாஸ்திரத்திலிருந்து விடுப்பட்டதைக் கூறும் சர்க்கம் இது.

சனி தசையில் சுக்ர புத்தி கெட்டிருந்தால்

சுந்தர காண்டம் 54 வது ஸர்க்கத்தை பாராயணம் செய்ய வேண்டும். ஹனுமான் லங்கையை எரித்ததைக் கூறும் சர்க்கம் இது

சனி தசையில் சுக்ர புத்தி கெட்டிருந்தால்

சுந்தர காண்டம் 38 வது ஸர்க்கத்தை பாராயணம் செய்ய வேண்டும். ஹனுமாருக்கு சீதா தேவி சூடாமணி தந்ததைக் கூறும் ஸர்க்கம் இது.

சனி தசையில் புத புத்தி கெட்டிருந்தால்

சுந்தர காண்டம் 35 வது ஸர்க்கத்தை பாராயணம் செய்ய வேண்டும். சீதையிடம் ஹனுமார் செய்த ஸ்ரீ ராம வர்ணனையைக் கூறும் ஸர்க்கம் இது.

கேது தசை சுக்ர புத்தி கெட்டிருந்தால்

சுந்தர காண்டம் 65 வது ஸர்க்கத்தை பாராயணம் செய்ய வேண்டும். ஹனுமார் ஸ்ரீ ராமரிடம் சீதையைக் பார்த்ததைச் சொல்லும் ஸர்க்கம் இது.

சுக்ர தசை சுக்ர புத்தி கெட்டிருந்தால்

சுந்தர காண்டம் 36வது ஸர்க்கத்தை பாராயணம் செய்ய வேண்டும் அங்குலிய ப்ரதானத்தை விவரிக்கும் ஸர்க்கம் இது. மூன்று காலமும் இதைச் சொன்னால் நலம் பயக்கும். புதனுடன், சனி நீசமாக இருந்தாலோ பால காண்டம் 16வது ஸர்க்கத்தை பாராயணம் செய்ய வேண்டும். புத்ர லாபம் பெற விரும்புவோர் சொல்ல வேண்டிய ஸர்க்கம் இது.

About The Author