நவக்கிரகங்கள் (22)

நவகிரக ஸ்தோத்ர கிருதிகள்

சங்கீத மும்மணிகளான சியாமா சாஸ்திரிகள், தியாகராஜர் முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் அபூர்வமான கிருதிகளைப் படைத்தவராவர்

ஸ்ரீ முத்துசாமி, தீட்சிதர் (கி.பி 1776-1835) அழகிய சம்ஸ்கிருத பதங்களுடன் இறைவனைப் புகழ்ந்து பல அரிய அற்புதமான கிருதிகளைப் படைத்துள்ளார்.

நவ கிரகங்களைப் போற்றி, ஸ்ரீ தீட்சிதர் இயற்றிய கிருதிகள் சொல் ஆழமும், பொருள் ஆழமும் மிக்கவை.

நவ கிரக அருளை பெற வேண்டுவோர் நாட வேண்டிய இந்த 9 கிருதிகளைக் கீழே பார்க்கலாம்.

1. சூர்யன்

பல்லவி

ஸூர்யமூர்தே நமோஸ்து தே
ஸூந்தர சாயாதிபதே

அனுபல்லவி

கார்ய காரணாத்மக ஜகத் ப்ர
காஸ ஸிஹ்ம ராஸ்யாதி பதே
ஆர்ய வினுத தேஜஸ் பூர்தே
ஆரோக்யாதி பலத கீர்தே

சரணம்

ஸாரஸ மித்ர மித்ர பானோ
ஸஹஸ்ர கிரண கர்ண ஸூனோ
க்ருர பாப ஹர க்ரு ஸானோ
குருகுஹ மோதித ஸ்வபானோ
ஸுரி ஜனேடித ஸூதினமணே
ஸோமாதி கிரக ஸிகாமணே

தீரார்சித கர்ம ஸாக்ஷிணே
திவ்யதர ஸப்தாஸ்வ ரதினே
ஸெளராஷ்ட்ரார்ண மந்த்ராத்மனே
ஸெளவர்ண ஸ்வரூபாத்மனே
பாரதீஸ ஹரி ஹரிஹராத்மனே
பக்தி முக்தி விதரனாத்மனே

கருத்துரை

உலகத்திற்கு வெளிச்சம் தருபவரும் சிம்ம ராசியின் அதிபதியும், மகான்களால் துடிக்கப்படுபவரும், தேஜஸை இன்றும் அதிபிரகாசம் செய்பவரும், ஆரோக்யத்தைக் கொடுப்பவரும், தாமரைக்கு நன்பனும், ஆயிரம் கிரணங்களை உடையவரும், கர்ணனின் தந்தையும், கொடிய பாவங்களைப் போக்குபவரும், குருகுஹருக்கு சந்தோஷம் அளிப்பவரும். இரவில் அக்னியின் வசிப்பவரும், ஞானிகளால் ஸ்தோத்திரம் செய்யப்பட்ட வரும், பகலுக்கு அதிபதியும், சந்திரன் முதலிய கிரகங்களில் சிரேஷ்டமாணவரும், தீரர்களால் பூஜிக்கப்பட்ட வரும், எல்லா கார்யங்களுக்கும் சாட்சியானவரும், எழு குதிரைகள் பூட்டப் பட்ட ரதத்தில் பவனி வருபவரும், ஸூர்ய அஷ்டாக்ஷர மந்திரத்தால் அடையக் கூடியவரும்.ஸ்வர்ண ரூபம் உடையவரும், மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு சிவன் ஆகியோருடைய சொரூபம் உடையவரும், பக்தி மோட்சம் ஆகியவற்றை அருளுபவரும், அழகிய சாயா தேவியின் பதியுமான ஸ்ரீ சூர்ய பகவானே உமக்கு நமஸ்காரம்!

2.சந்திரன்

பல்லவி

சந்த்ரம் பஜமானஸ
ஸாது ஹ்ருதய ஸத்ருஸதம்

அனுபல்லவி

இந்த்ராதி லோக பாலேடித தாரேஸம்
இந்தும் ஷோடச கலாதரம் நிஸாகரம்
இந்திரா ஸஹோதரம் ஸூதாகர மனிஸம்
சங்கர மெளனி விபூஷணம் சீத கிரணம் சதுர்புஜம்
மதனச் சத்ரம் க்ஷபாகரம் வெங்கடேச நயனம்

விறான் மனோ ஜனனம் விதும் குமுத மித்ரம்
விதி குறுகுஹ வக்த்ரம்

சசாங்கம் கீஷ்பதி சாபானுக்ரஹ பாத்ரம்
சரஸ்சந்த்ரிகா தவள ப்ரகாச காத்ரம்
கங்கண கேயூர ஹார மகுடாதி த்ரம்
பங்கஜரிபும் ரோஹிணீ ப்ரியகர சதுரம்

கருத்துரை

மனமே! சாது ஜனங்களின் மனதை ஒத்தவரும் அஷ்டதிக் பாலகர்களால் ஸ்தோத்திரம் செய்யப்பட்டவரும், தாரையின் நாயகரும், லக்ஷ்மியின் சகோதருரம், எப்பொழுதும் அம்ருதத்தை வர்ஷிப்பவரும், குளிர்ந்த கிரண்ங்களை உடையவரும், சிவனுடைய ஜாடையில் ஆபரணமாக விளங்கும்பவரும், மன்மதனுக்கு குடையாயும், ஸ்ரீ வெங்கடேசருக்கு நேத்ரமாயும், பகவானுடைய மனதில் உதித்தவரும், ஆம்பலின் நண்பரும், சுப்ரமணியருடைய முகமாய் இருப்பவரும், முயலை அங்கமாக உடையவரும், ப்ருஹஸ்பதியின் சாபத்திற்கும், அனுக்ரஹத்திற்கும் பாத்திரமானவரும், வெள்ளி மேனி உடையவரும், காப்பு, தோள்வளை, மாலை, கீரீடம் இவைகளை தரித்தவரும், தாமரை புஷ்பத்திற்கு விரோதியும், ரோஹிணியில் உச்சம் போற்றவரும், ரோஹிணிக்கு மிகவும் பிரியமானவருமான சந்திரனை ஸ்தோத்திரம் செய்!

About The Author

1 Comment

Comments are closed.