பல நாள் பார்க்காத நண்பனை வழியில் பார்த்தால் நாம மறக்காம சொல்றது, ”வாப்பா! டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.”
பகல் முழுக்க டிவி பார்த்துக் கொண்டிருந்தாலோ, கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலோ, ஒரு கப் டீ குடிக்கலாமேனு நினைக்கறதுண்டு.
இஞ்சி டீ, எலுமிச்சை டீன்னு டீயில் எத்தனையோ வகைகள் இருந்தாலும் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்த பச்சைத் தேனீர் விசேஷமானது.
4000 வருடங்களுக்கு முன்னால் சீனர்கள் கண்டுபிடித்ததுதான் இந்த பச்சைத் (Green) தேனீர். தலைவலி, மன அழுத்தம், செரிமானக் கோளாறுகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட பச்சை டீ, இதயத்தின் ஆரோக்கியத்திற்கு உதவும் அருமருந்தாகும்.
பலசரக்கு கடைகளில் கூட இப்போது கிடைக்கும் இந்த டீயின் மருத்துவ குணத்திற்கு அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்டான Epicgalllocatechin gallate, (EGCG) காரணம். கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், இரத்திலுள்ள கட்டிகளைக் கரைக்கவும், புற்றுநோய்ச் செல்களை வளர விடாமல் செய்யவும் கிரீன் டீ உதவும். ஆங்கில மருத்துவத்தில் மாத்திரைகள் உண்டு. பக்க விளைவால் துன்பப்படுவர்களுக்கு இந்தத் தேனீர் நிச்சயம் உதவியாக இருக்கும்.
பல நோய்களுக்கு மூலகாரணியான உடல் பருமனைக் குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது கீரின் டீ. உடலிலுள்ள அதிகப்படியான கலோரிகளைக் குறைக்க சோடாவிற்குப் பதில் சுவையான பச்சைத் தேனீர் குடித்து ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
உணவிலுள்ள விஷத்தன்மையை முறிக்க, பல் வலியைக் குறைக்க, உங்கள் தோலின் நிறத்தைப் பாதுகாக்க எனச் சொல்லிக் கொண்டே போகலாம் . ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் குடிக்கலாம் இந்த டீயை. பச்சை டீயைக் குடித்து பல நோய்களுக்கும் டாடா சொல்லுங்கள்.
ஆதாரம் : இணையம்.
டாடா
சித்திரைத் திரு நாளில் நிலாச்சாரல் அன்பர்கள் அனைவரும் நலமோடும் வளமோடும் வாழ வாழ்த்துகிறேன்!
பாலு சார்,
வாழ்த்துகளுக்கு நன்றி. நிலாக் குடும்பம் சார்பில் எங்களின் வாழ்த்துக்களையும் வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
உபரித் தகவல்:
தேனீரை குளிர்ந்த தண்ணீருடன் பருகினால் உடல் பருமனாகும்!
தேனீரை வெந்நீருடன் கலந்து பருகினால் உடன் இளைக்கும்!
தகவலுக்கு நன்றி மாயன்
Epicgalllocatechin gallate —> It is epigallocatechin gallate
No c” between epi and gallo.”
தகவலுக்கு வாழ்த்து
கை பலம்