நம் சிறைகளின் வலைப்பின்னல் (1)

1.

அன்பே,

எல்லாம் சிறையென்றானபின்
அதிலேது நற்சிறை, தீச்சிறை?

நம் சிறையினின்று
நாமாய் விடுபட
ஏது மார்க்கம்?

உன் வலையில் நான்
என் வலையில் நீயென
எத்தனை யுகம்தான்
இழிந்து திரிவது இப்படியே?

இதுதான் வாழ்வெனில்
ஏனது நமக்கு?

உன் வலைப்பின்னல்
என்னையும்
என் வலைப்பின்னல்
உன்னையும்
இரையாக்கி அழித்திடும் கொடூரம்
ஏனின்னும் உரைக்கவில்லை

எப்போதாவது
அவதானித்ததுண்டா நீ
ஒய்யாரமாய்ப் பரந்துகிடக்கும்
வெட்டவெளிதனில்
சுதந்திரமாய் மிதத்தல் பற்றி-
சிறகொளிர மிதக்குமந்த
பேர்தெரியாப் பட்சியாய்?

(‘சாட்சியாக…’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author