இனிமையான மாலை நேரம்.
அன்றைய தினம் நடராஜனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி. மிகவும் கோலாகலமாய் நடந்து கொண்டிருந்த வேளை.
வரவேற்பு அரங்கில் மணமக்களை வாழ்த்துவதற்காக சாந்தாராம் நீண்ட வரிசையில் நின்றிருந்தான். முப்பது நிமிடங்களில் சாந்தாராம் மணமக்களை நெருங்கிவிட்டான்.
மணமகளுக்குத் தன்னைச் சேர்ந்தவர்களை அறிமுகப்படுத்தி வந்த மணமகன் நடராஜன், சாந்தாராமைக் கண்டதும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. நடராஜனுக்குக் கண்களில் நீர் ததும்ப ஆரம்பித்துவிட்டது.
சாந்தாராம் நடராஜனைப் பார்த்து "போட்டோ மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். உணர்ச்சி வசப்படாதே!" என்று தேற்றினான்.
நடராஜன் சாந்தாராமைப் பார்த்து "ரொம்ப சாரிப்பா.. நீண்ட வருடங்கள் தொடர்பு இல்லாததால் உனது முகவரி என்னிடம் இல்லை. அதனால் அழைப்பிதழ் அனுப்ப முடியவில்லை. மறந்து விட்டேன். மன்னித்து விடு" என்றான் கனத்த குரலில்.
"நேரிலோ மற்றும் தொலைபேசியிலோ அழைத்தாலே அல்லது அழைப்பிதழ் அனுப்பினாலே அதிலும் ஒரு குறை காணுவார்கள். சரியாக என்னை மதித்துக் கூப்பிடவில்லை என்று முறுக்கிக்கொள்வார்கள். திருமண வைபவத்தில் சம்பந்தி அல்லது சம்பந்தியின் உறவினர் என்ற பெயரில் வந்து எதாவது ஒரு குழப்பத்தை கிளப்பி விட்டு குளிர் காய்பவர்களும் உண்டு. அழைக்காமல் விடுபட்டிருந்தும் நீ என் திருமணத்திற்கு வந்ததை நினைக்கும் போது உன்னுடைய பெருந்தன்மையை என்னவென்பது!" மனதிற்குள் நெகிழ்ந்தான் நடராஜன்.
"எப்படி என் திருமணத் தேதி உனக்குத் தெரிந்தது?" கேட்டான் நடராஜன்.
"தற்செயலாய் எனது நெருங்கிய உறவினரை சந்திக்க நேரிட்டது. ஒரு வாரமுன்புதான் உனக்கு திருமணம் என்பது எனக்கு தெரிய வந்தது."
"நீ என் நண்பேன்டா!" என்று சாந்தாராம் சொன்னதும் வரவேற்பு அரங்கம் முழுவதும் களைகட்டியது.
சபாஷ்
உயர்ந்த நட்புக்கு அழைபுபுகள் தேவையில்லை
அருமை!!
எனகு ரொம்ப பிடுசுருகு………………………. சுப்ரொ சுபெர்
ஆகா கதை அல்ல நிஜம் அருமையான வரி வடிவம் வாழ்துக்கள்