இல்லாதிருத்தல்
ஏதேதோ உண்டு உன்னிடம்
என்றெண்ணியிருந்தேன்
ஏதுமில்லை
என்றறிந்திட்ட
இக்கணம்வரை
பொய்மெய்
நீயும்
உன் இன்னபிறவும்
உண்மைதான் என்றபோதிலும்
பொய்யாகவும் தோன்றுகிறது
சில அபூர்வ கணங்களில்
நீயும்
உன் இன்னபிறவும்
பொய்தான் என்றபோதிலும்
உண்மையாகவும் தோன்றுகிறது
வேறுசில அபூர்வ கணங்களில்
“