புதுமுக இயக்குநர் பாலாஜி தரணிதரனின் புதுமையான பெயருள்ள இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார் வேத் சங்கர். நாயகனுக்கு, வாழ்வின் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடந்த எல்லாம் நினைவை விட்டு அகன்று விடுகின்றன. அதை அவன் நண்பர்கள் எப்படிச் சரி செய்கிறார்கள் என்பதைச் சிரிக்கச் சிரிக்கப் படமாக்கியிருக்கிறார்கள்.
எக்ஸ்கியூஸ் மீ சார்!
கார்த்திக் நேத்தா எழுதியுள்ள இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார் மனோ. படத்தை முன்னிலைப்படுத்துவதற்காகவே (Promo) உருவாக்கப்பட்டது போல் தெரிகிறது. இதில், கதையின் முக்கியக் கதாபாத்திரங்களை விவரிக்கிறார்கள். வார்த்தைகளைக் கவனித்தால் புரியும். இடையில் வரும் தமிழ் ராப் நகைக்க வைக்கிறது!
ஹே கிரேசி பெண்ணே!
இசையமைப்பாளர் வேத் சங்கரே இதை எழுதி, பாடியும் இருக்கிறார். காதலியை வர்ணிக்கும் வழக்கமான பாடல்தான் என்றாலும் குறும்பு வார்த்தைகளால் பூச்செண்டு நீட்டுகிறது! குரலில் அவ்வளவு உற்சாகம்! இசை, ஓரிரு இடங்களில் ஏ.ஆர்.ரகுமானின் ஹிட் பாடல்களை நினைவுபடுத்தினாலும் பாடல் ‘அட’ போட வைக்கிறது என்பதை மறுக்க முடியாது.
"இட்லி சட்னி போல, சென்னா பூரி போல
சூப்பர் ஜோடி, இக்கட சூடு மாமி!" – பாடல் வரிகளின் குறும்புக்கு ஓர் எடுத்துக்காட்டு!
ஓ கிரேசி மின்னல்!
கார்த்திக் நேத்தாவின் இந்தப் பாடலைப் பாடியிருப்பவர் ஆண்ட்ரியா. இதற்கு முந்தைய பாடலின் அதே மெட்டில் இது நாயகி வெர்ஷன். இதிலும் குறும்பு வார்த்தைகள் நிரம்பி வழிகின்றன.
பின்னணியில் கிதாரின் மெல்லிய இசை செவி ஈர்க்கிறது.
"இட்லி மாவில் கோலம் போட்டேன்,
மெடிக்கல் ஷாப்பில் கருவேப்பிலை கேட்டேன்" – எனக் குறும்புடன், மெல்லிய கவித்துவமும் மிளிரும் பாடல்!
ஆம்லேட் போட்டா
படத்தின் தலைப்பை விளம்பரம் செய்யும் பாடல்! முகநூல் விசிறிகளே (facebook fans) எழுதியுள்ள பாடல் என்பது இதன் தனிச் சிறப்பு! வேத் சங்கரே இதையும் பாடியுள்ளார். குத்துப் பாடல்தான் என்றாலும் இசைச் சேர்ப்பில் மற்றதில் இருந்து வேறுபடுகிறது.
இவை போக, தீம் ட்ராக் ஒன்றும் ஆல்பத்தில் உண்டு. அதில் காமிக் வாசனை வீசுகிறது!
மொத்தத்தில் இந்த ஆல்பம், ஒரு வண்ணமயமான காமிக் புத்தகத்தைப் புரட்டியது போன்ற உணர்வைத் தருகிறது!. வழக்கமான வணிகத் திரைப்படங்களின் சாயலிலிருந்து மாறுபட்ட முயற்சிக்காகவே இதைப் பாராட்டலாம்!
இந்த ஆல்பம், தொலைந்த பக்கத்தைத் தேட வைக்கும் இசையால்!
“