இதுதானய்யா அரசியல்!
"ஆஹா.. மன்னரின் உடம்பில்தான் எத்தனை.. எத்தனை வீர விழுப்புண்கள்! பார் புகழ வேண்டும் நம் வீரமகனை!"
"யோவ்.. புலவரே! அதெல்லாம் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி உருவாக்கினது சொன்னா நம்பவா போற?!"
குடிமகனே!.. பெருங்குடிமகனே..!
"என்ன இது! புதிதாகப் பதவியேற்றிருக்கும் மன்னர் நாடு முழுவதும் ‘டாஸ்மாக்’ திறக்கிறாரே!"
"நாளப் பின்ன.. வரலாறு நம் மன்னரை ‘குடி காத்த கோமகன்’னு சொல்லணுமில்லையா.. அதுக்குத்தான்!"
விடு..விடு.. லூஸுல வுடு!
"எதிரி நாட்டு மன்னனை வென்று நாம் புதிய புவியியல் படைப்போம்!"
"மன்னா! அது புவியியல் இல்லை.. வரலாறு"
"யோவ்.. விடய்யா! ஒரு ஃப்ளோவுல ரைமிங்கா வந்துடுச்சி!"
என்னாதிது..!!
"மங்குணிப் பாண்டியரே! நாட்டில் இரவில் நகர்வலம் செல்வதற்கேற்ற சூழ்நிலை நிலவுகிறதா?"
"இல்லை மன்னா! இரவில் எங்கெங்கும் வழிப்பறிக் கொள்ளை நடக்கிறது. நாம் சிறிது காலம் பொறுத்திருப்போம்!"
ஆஹா! நீரல்லவா அமைச்சர்!
"அமைச்சரே! நாட்டில் ஊழல் தலைவிரித்தாடுகிறதே! என்ன செய்யலாம்?"
"நீங்கள் ஒன்று கவலைப்படாதீர்கள் மன்னா! அரண்மனை நாவிதரை வரச் சொல்லியிருக்கிறேன். விரைவில் சீர்செய்து விடுவார்!"
“
மன்னர் ஜோக் ஒன்று(சொந்தக் கற்பனைதான்):
அமைச்சர்; மன்னா, அந்தப் புலவரிடம் ஏமாந்து போய் பரிசளித்து விட்டீர்கள்!
அரசர்: எப்பீடி….
அமைச்சர்:அவர் உங்களைப் புகழ்ந்து பாடியதெல்லாம் ஒரிஜினல் இல்லை மன்னா. அவ்வளவும் பிற புலவர்கள் பாடலின் ரீமிக்ஸ்!
அரசர்: என்னாது…ரீமிக்ஸா..!
pls rishi
oru ore oru joke soli erukalam ela
லதா
ஏன்..ஏன். இந்த கொலவெறி!
ராத்திரி 11.45க்கு மண்டைய ஒடச்சி யோசிச்சி யோசிச்சி எழுதுனது..
ப்ளீஸ்.. ஒரு வார்த்தை சொல்லுங்களேன்.. சூப்பர்னு.
எஞொயெட்
very very bad