நகைச்சுவை பிட்ஸ் (57)

அந்தக் காலம்! இந்தக் காலம்!

"அமைச்சரே! நாட்டில் மாதம் மும்மாரி பொழிகிறதா?"

"மக்களிடமிருந்து சரமாரியாய் வசைமாரி பொழிகிறது மன்னா!"

*****

‘பலத்த’ முன்னேற்பாடு

"மன்னரின் முதுகுப்புறம் மட்டும் கவசம் பலமாக இருக்கவேண்டும் என்கிறாரே! ஏன்?"

"புறமுதுகிட்டு ஓடும்போது ஈட்டிகள் துளைக்காமல் இருக்கத்தான்!!"

*****

இந்தப் படை போதுமா?!

"யாரங்கே! எதிரிநாட்டு மன்னன் படையெடுத்து வருகிறான். உடனே நம் யானைப் படையை தயார் செய்யுங்கள்.."

"நம் யானைகளைத்தான் பக்கத்து நாட்டு மன்னனுக்கு outsourcing செய்து விட்டோமே! மன்னா!"

*****

புலிகேசி எலிகேசியாய் ஆன கதை

"மன்னா! இன்னும் ஆறு மாதத்தில் காங்கேய நாட்டு மன்னன் நம் மீது படையெடுப்பான் போலத் தெரிகிறது. என்ன செய்யலாம்?"

"அமைச்சரே! உடனே நம் படைவீரர்கள் அனைவரையும் எல்.ஐ.சி. பாலிஸி எடுத்துக் கொள்ள அறிவுறுத்துங்கள்."

*****

பில்டிங்கு ஸ்டிராங்கு… ஆனா..!

"தர்பாரில் நம்முடைய மன்னரின் பாலே நடனம் அருமையாய் உள்ளதே!"

"நீ வேற..! பண்ணபுரத்து மன்னன் படையெடுத்து வருவதாய் சொன்ன உடனே மன்னரின் பேஸ்மட்டம் ஆடுகிறது!"

About The Author

4 Comments

  1. P.Balakrishnan

    மன்னர் ஜோக் ஒன்று(ஒரிஜினல்தான்):
    மந்திரி: என்னதான் உங்களைப் புகழ்ந்து பாடினாலும் அந்தப் புலவருக்கு நீங்கள் பிளான்க் செக் கொடுத்திருக்கக் கூடாது மன்னா.

    அரசர்: மந்திரியாரே! நான் என்ன அவ்வளவு கேணயனா? என் பாங்க் பேலன்ஸே வெறும் ஐ நூத்திச் சொச்சந்தான்!

  2. paru

    ஜோக் அப்படி ஒன்னும் சிரிப்பு வரவைக்கவில்லை

Comments are closed.