போலிஸ் : தினமும் காலையும், மாலையும் போலிஸ் ஸ்டேசனுக்கு வந்து கையெழுத்துப்
போட்டு போகணும். சரியா?
திருடன் : சரிங்க அய்யா, அப்போ நான் என் தொழிலுக்கு போகலாங்களா!
*****
ஆசிரியர் : உங்க மகன் சிகரெட் பிடிக்கிறான். உங்களுக்குத் தெரியுமா?
அப்பா : என க்கு சிகரெட் எல்லாம் பிடிக்கத் தெரியாது சார்!
*****
“ஏன் சார் உங்க பேர அடிக்கடி மாத்திக்கிறீங்க?”
“என்ன செய்யிறது! அடிக்கடி பந்தயம் கட்டிடறேனே!”
*****
“எதுக்குடா திரு திருன்னு முழிச்சிக்கிட்டு போற?”
“யாரும் பார்க்குறதுக்குள்ளே, ஸ்டாம்ப் ஒட்டாத கடுதாசியை தபால் பெட்டியில போட்டுட்டு வந்துட்டேன் அதான்!”
*****
நீதிபதி : நீயா பிக்பாக்கெட் அடிச்ச? நம்ப முடியலயே! பார்த்தா அப்பாவியாஇருக்கியே!
திருடன் : உங்கள மாதிரிதான் ஐயா எல்லோரும் ஏமாந்துடறாங்க!
*****
போலீஸ்-திருடன் நீதிபதி ஜோக்கைப் படித்ததும் நினைவுக்கு வந்தது:- நீதிபதி: நீ இரண்டாம் கல்யாணம் பண்ணியதற்கான குற்றம் சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கப் படவில்லை.எனவே உன்னை விடுதலை செய்கிறேன். நீ வீட்டுக்குப் போகலாம். குற்றம் சாட்டப்பட்டவர்:எந்த வீட்டுக்குங்கய்யா?
ஜோக் நல்லாருக்கு பாலகிருஷ்ணன்