தோழிக்கு எழுதிய மடல்கள் (5)

என் கிறுக்கல்களின்
முதல் ரசிகை நீ!!!
என் பரிசுகளெல்லாம்
உன் பாராட்டுக்கள்தாம்!!!

விதிவிலக்காய் சிலசமயம்
விமரிசனங்களும் உண்டு!

பத்து ஆண்டுகளாய்
பாரம் சுமக்கும் சுமைதாங்கியாய்
உனக்கு நானும்
எனக்கு நீயும்

சுகங்கள்தான் அதிகமாய்
சுமந்திருக்கிறோம்
சோதனைகள் கூட நாம்
சந்தித்தவுடன் சுகமாகிப் போனதால்!

வாழ்க்கை முழுவதுக்குமாய் என்று
வருடக்கணக்காய் நாக்கு
வற்ற வற்ற பேசியிருக்கிறோம்!
பிரிந்தாலும் நினைத்துப்
பார்க்கப் போதுமானதாய்!!!

எண்ணங்களின் அலைவரிசை
இருவருக்கும் ஒன்றாய் இருந்திருக்கிறது!
இத்தனை காலம் நம் நட்பு வளர
இதுவும் ஒரு காரணம்.

எதிர்பார்ப்பில்லாத
எந்த ஒரு உறவுமே
என்றுமே பிரிந்ததில்லை
நம் நட்பும் அவ்வாறு உருவானதுதான்…

எல்லாவற்றிற்கும் முதலான
என் விநாயகனை
என்றென்றும் வேண்டுகிறேன்
வளமோடு நாம் வாழ!!!

About The Author

5 Comments

  1. கீதா

    இப்படியொரு ஆத்மார்த்தமான நட்பு நமக்குக் கிடைக்கவில்லையே என்று என்னை ஏங்கவைக்கும் கவிதை. வாழ்த்துகளும் பாராட்டுகளும் தோழி. என்றென்றும் நட்பு நிலைபெற்று வாழ்க.

  2. Hema

    அழகான வரிகள் தேவி, /எதிர்பார்ப்பில்லாத
    எந்த ஒரு உறவுமே
    என்றுமே பிரிந்ததில்லை
    நம் நட்பும் அவ்வாறு உருவானதுதான்…/

  3. DeviRajan

    நன்றி கீதா! உங்களின் வார்த்தைகள் மூலம் எங்களின் நட்பின் ஆத்மார்த்தம் வெளிப்பட்டதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

  4. DeviRajan

    மிக்க நன்றி கீதா! எல்லா உறவிலும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு மட்டும் இருந்தால் உலகமே இன்பமயமாகிவிடும் இல்லையா?

  5. kavita

    ஒவ்வொரு கவிதையும் அழகு எத்தனை தடவை படித்தாலும் இனிமை, சுபெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Comments are closed.