நிரந்தனமானதொரு பிரிவு
நிகழப்போவதில்லை நமக்குள்ளே!
தற்காலிகமானதொரு பிரிவை
தாங்கிக் கொள்ளப் பழகிவிட்டோம்!
நட்பென்ற சிறையில்
நாட்கணக்காய் அல்ல
ஆயுள்கைதியாய் இருக்கத்தான்
ஆசைப்படுகிறேன் நான்!
புதிதாய் வரும் பந்தங்கள்
பழைய விலங்குகளைப்
பழுதாக்கிவிடலாம்!
மறுக்க முடியாத நிஜம்
அறுக்க நினைத்தாலும் இயலாது!
எட்டாத தூரத்தில் இருந்தாலும்
கிட்டிய தூரம்தானே நம் நினைவுகள்!
திக்குத் தெரியாத தீவில் இருந்தாலும்
பரம சுகமாய் இருக்குமே நம்
பழைய கால நினைவுகள்!
உன் பிறந்த நாளில்
உனைவிட்டு வெகுதூரம் சென்றாலும்
உடல் மட்டும் உலகத்தோடு உறவாடும்!
உள்ளம், உள்ளம் சார்ந்த எண்ணங்கள்
என்றும் என்றென்றும்
உன்னுடனே!!!
நமக்கு கவிதை எழுத வராதுங்க, அதனால தேவியோட இந்த அருமையான கவிதையை நம்ம நிலா மற்றும் நிலாச்சாரலுக்கு பிறந்த நாள் பரிசாக அர்பணிக்கிறேன்!(தேவி கோவிச்சுக்க மாட்டீங்கதானே!!!!!!)
நட்பின் மேன்மையை உள்ளது உள்ளபடி எடுத்தியம்பும் அழகுக் கவிதை. கொடுத்துவைத்த தோழிகள்! வாழ்க!
வணக்கம் Hஎமா! உலகத்தில் உள்ள எல்லாத் தோழிகள் சார்பாகவும்தான் அந்தக் கவிதை. என்னுடைய கவிதை மற்றவங்களுக்கு அர்ப்பணிக்கிற அளவிற்கு இருப்பதே எனக்கு பெருமையாக இருக்கிறது. மிக்க நன்றி. இந்தக் கவிதையை என் திருமணத்திற்கு முன்பு நான் எழுதினேன். அப்பொழுது எனக்குத் தெரியாது, என் தோழியை விட்டு நிஜமாகவே ஒரு திக்குத் தெரியாத தீவிற்குத்தான் வருவேன் என்று.
வணக்கம் கீதா! உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி!
Thank you Devi!
”திக்குத் தெரியாத தீவில் இருந்தாலும்
பரம சுகமாய் இருக்குமே நம்
பழைய கால நினைவுகள்!”
உண்மை தான். தோழிகளைப் பிரிந்து நீண்ட நாட்கள் ஆனாலும், வெகு தூரத்திற்குக் குடி பெயர்ந்தாலும் பழைய நினைவுகளை அசை போடும் போது மனதிற்குக் கிடைப்பது பரம சுகம் தான். நல்ல கவிதைக்குப் பாராட்டுக்கள் தேவி!
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி கலையரசி!