அன்று…..
* முதல் மழைத்துளி மண்ணில்…
விழும் முன்பு…..
காகிதத்தில் கவிதை பூத்தது!
* பிறை நிலாவை மட்டுமல்ல..
அமாவாசை அமைதியையும்.
ஜன்னல் கம்பிகளுக்கு நடுவே-
ரசிக்க முடிந்தது!
* எந்த திருமணத்திற்குச் சென்றாலும்..
அந்த மணப்பெண் -கோலத்தில்
என்னையே காண வைத்தது..
என் கற்பனை லோகம்!
* தோழிகளோடு…
வாய் வலிக்க அரட்டை!
வயிறு வலிக்க சிரிப்பு!
பெருசுகள் முணுமுணுக்க ..
ஆட்டம் பாட்டம்..
அமர்க்களம்..பேருந்திலும்..!
ஆனால் இன்றோ…
சிரிக்கலாம் …சத்தம்
வெளியே வராமல்!
பேசலாம்..ஆமோதிப்பை
மட்டும் அர்த்தமாக்கி!
ரசிக்கலாம்…அமைதியாய்
எனக்கு மட்டும் தெரியும்படி!
கற்கலாம்..சமையல்
சார்ந்த விஷயங்கள் மட்டும்!
இப்படி…
கொஞ்சம் கொஞ்சமாய்..
அவன் போட்ட மூன்று
முடிச்சுகள்..இறுக்க இறுக்க..
சிறகுகள் ஒவ்வொன்றாய்…
உதிர்ந்த பறவையாய்…
மௌனத்தையே என் மொழியாக்கி…
நாட்கள் நகர்த்துகிறேன் ..
‘மனைவி’ எனும் ஒற்றை..
அடையாளத்தோடு..?…என்னை-
மட்டும் தொலைத்தவளாய்..!!
அழகான புதுக்கவிதை.கடைசி மூன்று வரிகள் மனதைவிட்டு அகல மறுக்கின்றன.
நல்லா இருக்கு. திருமணதிற்கு முன்பு நடக்கும் சுவராஷ்யமான இன்னும் பல நிகழ்வுகள் சொல்லியிருந்தால் இன்னும் touchinga இருந்திருக்கும். super keep it up
wonderful wordings anna………… i luv diz. .
தலைப்பை வாசிக்கையில் கவிதை காதலில் தொலைவது குறித்து என்று நினைத்தேன். ஆனால் இந்த தொலைதல், விரும்ப தகாத ஆனாலும் நடந்து போகின்ற ஒன்று. நல்ல கவிதை.
அருமை!! திருமனம் வேடந்தன்கல் பரவைஐ வீட்டு பரவை ஆக்க்குகிரது