எந்தத்தேவதை
எக்கணத்தில்
கண்விழித்தென்னை ஆட்கொண்டு
எப்படியெல்லாம் வதைக்குமோ
ஆர்கண்டது?
கவனமாயிருக்கணும்
அவைபற்றி என்கிறதொரு
உள்குரல்
கவனம் எப்படி வரும்
அதீதாவின் உதவியின்றி என்கிறது
இன்னொரு குரல்:
எல்லாத் தேவைதைகளிடமிருந்தும்
இயல்பாய் விடுபட
அதீதாவைச் சரண்புகு
அதைவிட்டால் வழியில்லையென
அடித்துச் சொல்கிறது
அக்குரல்.