இன்பத்தைத் தந்து சொர்க்கம் இதுவேதான் எனமயக்கி
ஏகாந்தம் போக்கு மயிலாள்
இதுவன்றோ அமுதமென இலையில் படைப்பதிலே
எழில்மிக்க நளன் தங்கையாம்
அன்பைப் பகிர்ந்து பெறும் அழகான குழந்தைகளில்
அவள் சுற்றம் விரிவாகுமாம்
அல்லும் பகலுமவர் முன்னேற்றம் கண்டிடவே
அரும்பாடுகள் படுபவள்
துன்பத்தில் உற்றபெரும் தோழனாய் நின்று வரும்
துயரங்களைப் போக்குவாள்
தொடர்ந்து மதியூகத்தில் எப்போதுமே வீட்டில்
துள்ளிடும் மகிழ்ச்சி வெள்ளம்
தன்பங்கு சுகமென்று தானெதிர் பாராத
தாரமோர் அன்னையாவாள்
தண்டமிழர் உறவுகளில் மனைவி பெறும் இடமிந்தத்
தரணிபுகழ் தீபஒளியாம் !.
பாலு சார்!..
கலக்கிட்டீங்க….பெண்களுக்கு இத்தனை பெருமைகளா?
தன்பங்கு சுகமென்று தானெதிர் பாராத
தாரமோர் அன்னையாவாள்” இந்த வரிகள் அற்புதமா இருக்கு.
கருத்துள்ள கவிதை. கைவசம், மனவசம் இன்னும் எத்தனை கவிதைகள் உண்டோ???”
பாராட்டுக்கு மிகவும் நன்றி ராஜி. உள்ளதைத்தானே சொல்லியுள்ளேன்!
துணைவி என்பவள் குடும்பத்திற்க்காக எரியும் மெழுகு பொன்றவள் என்ற என் கருத்திற்க்கு இணையான கவிதை
நன்றி ரமேஷ்.