திருமண வாழ்வில் நொந்து போனவர்களின் சில புலம்பல்கள்

நான் (கடைக்காரரிடம்) : என் மனைவிக்காக இயற்கை உரத்தில் விளைந்த காய்கறிகள் வேண்டும். இங்கே இருக்கும் காய்கறிகளில் விஷ ரசாயனம் எதுவும் தூவவில்லையே?

கடைக்காரர்: இல்லை. அதெல்லாம் நீங்கள்தான் செய்து கொள்ளவேண்டும்!

                                                                *****

அந்த 60 வயதுக்காரர் தன் மனைவியுடன் தங்களது 35வது ஆண்டு மணநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த தேவதை அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி, அவர்கள் வேண்டும் ஒரு வரம் தருவதாகக் கூறிற்று.

மனைவி காஷ்மீருக்குப் போக வேண்டும் என்றாள். உடனே அது மந்திரக்கோலை சுழற்ற காஷ்மீருக்கு இரண்டு டிக்கட்டுகள் வந்தன. அடுத்துக் கணவர், தன்னுடைய மனைவி தன்னைவிட 30 வயது குறைந்தவளாக மாறவேண்டும் என்று கேட்டார். அவர் நினைத்தபடியே வரம் கிடைத்தது. இப்போது கணவனுக்கு வயசு 90!

                                                                *****

பையன் (அப்பாவிடம்): அப்பா, எனக்குப் பள்ளியில் நாடகத்தில் நடிக்க வேஷம் கிடைத்திருக்கிறது.

அப்பா: அப்படியா, என்ன வேஷம்?

பையன்: கல்யாணமாகி பத்து வருஷங்களான ஒரு கணவன் வேஷம்.

அப்பா: கவலைப்படாதே, அடுத்த நாடகத்தில் உனக்கு வசனம் பேசக் கூடிய வேஷம் கிடைக்க வாழ்த்துக்கள்.

                                                                *****

அவன் அவசரமாக மனைவியுடன் பல் டாக்டரிடம் சென்றான். "டாக்டர், உடனே ஒரு பல்லை எடுக்க வேண்டும். ஏதாவது வலி மறப்பதற்கான ஊசி என்று போட்டு நேரத்தை வீணாக்காதீர்கள். அவசரம்!"

டாக்டர் : அவ்வளவு தைரியமா? எங்கே இந்த நாற்காலியில் வந்து உட்காருங்கள்.

கணவன் (மனைவியிடம்): சொத்தைப் பல்லை உடனே பிடுங்க வேண்டும் என்று சொன்னியே போய் உட்கார்!

                                                                *****

மரணப் படுக்கையில் இருந்த மனைவி அருகில் அமர்ந்திருந்த கணவனிடம் (கண்களில் நீர் வடிய) : நான் இறப்பதற்கு முன் சில உண்மைகளைச் சொல்ல வேண்டும்.

கணவன்: பரவாயில்லை.. நீ ஒன்றும் சொல்ல வேண்டாம்.

மனைவி: இல்லை.. சொல்லாவிட்டால் என் ஆத்மா சாந்தியடையாது. எனக்கு உங்கள் நண்பர் கணேஷிடமும் பக்கத்து வீட்டுக்காரரிடமும் தொடர்பு இருந்தது.

கணவன்: எல்லாம் எனக்குத் தெரியும். அதனால்தானே உனக்கு விஷம் வைத்தேன்.

                                                                *****

About The Author

1 Comment

Comments are closed.