இன்சூரன்ஸ் ஏஜென்ட்: "கொஞ்சம் நினைத்துப் பாருங்கள், உங்கள் கணவர் திடீரென்று இறந்தால் எப்படியிருக்கும்?"
பெண்: "ரொம்ப நிம்மதியாயிருக்கும்."
*****
மனைவி (கணவனிடம்): "வாங்கோ, கொஞ்சம் வெளில போய் சந்தோஷமாய் இருக்கலாம்."
கணவன்: "சரி, நீ முன்னால வந்தா மறக்காம வாசக் கதவைப் பூட்டாம திறந்து வை!"
*****
அந்தக் கிணற்றில் சென்று வேண்டிக்கொண்டால் மனதில் நினைத்ததெல்லாம் நடக்குமாம். முதலில் கணவன் சென்று வேண்டிக்கொண்டான். பிறகு மனைவி சென்றாள். ‘தொப்’ என்று சத்தம் கேட்டது. திரும்பவே இல்லை.
கணவன் நினைத்துக் கொண்டான். "அப்பாடா, நான் வேண்டிக்கொண்டது நிஜமாகவே நடந்து விட்டது!"
*****
அவன்: என் மனைவியும் நானும் லீவிற்கு எங்கே போவது என்று தீர்மானிக்க முடியவில்லை. நான் ஊட்டி போக வேண்டும் என்கிறேன். அவளும் பிடிவாதமாக அங்கேயே வருவேன் என்று சொல்கிறாள்!
*****
ஒரு பொன்மொழி:
கல்யாண மோதிரம் – உலகத்திலேயே சிறிய கைவிலங்கு.
ஒரு அறிவிப்பு:
நாயையும் மனைவியையும் காணவில்லை – நாயைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பரிசு உண்டு.
*****
அவர் அந்த இடுகாட்டில் ஒரு கல்லறைக்கு முன் அமர்ந்து புலம்பிக் கொண்டிருந்தார்.
"ஏன் இறந்தீர்கள்! நீங்கள் ஏன் இறந்தீர்கள்?"என்று. அவர் இப்படிப் புலம்புவதைப் பார்த்து அருகே இருந்தவர் கேட்டார், "இறந்தவர் உங்களுக்கும் மிகவும் வேண்டியவரா?" என்று.
அவர் சொன்னார் "இல்லை.. இல்லை. இந்த ஆளை நான் பார்த்ததேயில்லை. இது என் மனைவியின் முதல் கணவனது கல்லறை"என்று.
*****”