திரட்டி வந்த சினி செய்திகள்

விஜயின் அழகிய தமிழ் மகன் சக்கைப் போடு போடுகிறதாம். சென்னையில் திரையிடப்பட்ட ஏழு திரை அரங்குகளிலும் எல்லா ஷோவும் நிரம்பி வழிகிறதாம். வேளாங்கண்ணி மாதா கோயிலில் படம் ரிலீசுக்கு முன் வேண்டிக்கொண்டு வந்தாராம் விஜய். போக்கிரி படம் வெற்றி பெற்றதற்கு வேளாங்கண்ணி மாதாவின் கருணைதான் காரணம் எனத் திடமாக நம்புகிறாராம் விஜய்.

***

பாவனா ரொம்ப சமத்துதான். சேர்த்த காசையெல்லாம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறாராம். நடிப்பதிலும் ரொம்ப ஹோம் வொர்க்கெல்லாம் செய்து அல்ட்டிக் கொள்வதில்லை. டைரக்டர் சொன்னபடி நடித்துவிட்டு அலட்டிக்கொள்ளாமல் போய்விடுகிறார். பிழைக்கத் தெரிந்த பாவனா, தற்சமயம் ராமேஸ்வரம் படத்தில் ஜீவாவுடன் ஜோடி.

***

நீங்களும் ஸ்ரீதேவி மாதிரி மூக்கு ஆபரேஷன் செய்துகொள்ளப் போகிறீர்களாமே என்று கேட்டால் எனக்கு என் நோஸ் தான் ப்ளஸ் பாய்ண்ட், நோ, நோஸ்கட் என்கிறாராம் சந்தியா.

***

தொடர்ந்து ஹிட் பாடல்களைத் தந்துகொண்டிருக்கும் யுவன் ஷங்கர் ராஜா அஞ்சு என்ற படத்தை விரைவில் தயாரிக்கிறார். அப்பாவின் ஆசி உண்டுதானே?

***

செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ரீமா சென் நடிக்கிறார். பருத்தி வீரன்தான் நாயகன். படத்தைப் பற்றி யாருடனும் பேசக்கூடாதென்று கண்டிஷன் போட்டிருக்கிறாராம் செ. ராகவன். ரீமா சென் அதனால் இப்பொ சைலண்ட் சென்!

***

திரை உலகில் எதிரும் புதிருமாக இருந்த ‘தலயும் தளபதியும் ஒண்ணாயிட்டாங்க’ என்பதுதான் இப்போது அவர்களின் ரசிகர்களுக்குத் தலையாய சேதி. அஜீத்தைத் தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்திருக்கிறாராம் விஜய். தல வாழை போட்ட விருந்தோ?

***

அசினுடைய பிறந்த நாளைக்கு அவருக்கு மெகா சைசில் ஒரு காதல் கடிதம் அனுபினார் ஒரு ரசிகர், அதைப் பார்க்காமலேயே கிழித்து விட்டாரராம். அசினுக்கு பிடித்த ட்ரெஸ் டிஷர்ட்டாம்.

***

அபியும் நானும் படத்தில் த்ரிஷாவிற்கு அப்பாவாக பிரகாஷ் ராஜ் நடிப்பதாக இருந்தார். ஆனால் இப்போது த்ரிஷாவிற்கு அப்பா ரோலில் நடிப்பதற்கு சங்கடமாக இர்ருகிறதாம். அப்பாவை அண்ணாவாக மாற்றி விடும்படிக் கேட்டுக் கொண்டிருக்கிறாராம். இந்தப் படதில் ப்ரிதிவி ராஜ் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்பது சற்று முன் வந்த செய்தி.

***

சரத்குமாரின் நாட்டாமை, சூர்யவம்சம் முதலிய இரட்டை வேடப் படங்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹிட். இப்போது 1977 படத்தில் அப்பா, மகன் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். சரத் ஞாபகம் வருதா?

***

1968ல் வெளியான ஜீவனாம்சம் படத்தில்தான் முதன் முதலில் லட்சுமி நடித்தார்.

***

அவள் ஒரு தொடர்கதை 1974ல் வெளியானது. இதன் மூலம் அறிமுகமானவர்கள் நடிகை சுஜாதா, ஜெய்கணேஷ்.

***

தமிழில் முதன் முதலாக வெளி நாடுகளூக்குச் சென்று எடுக்கப்பட்ட படம் சிவந்த மண். இயக்குனர் ஸ்ரீதர் அந்தப் படத்தைத் தன் தலை தீபாவளியன்று (1969ம் ஆண்டு) வெளியிட்டார்.

(அடிக்கடி தொடரும்)

(நன்றி: சினி இதழ்கள். இணைய செய்திகள்)

About The Author