ஒளிதரும் மெழுகின் உன்னதமே – எங்கள்
பாச உணர்வின் உறைவிடமே!
அறுசுவை உணவின் பிறப்பிடமே – நல்ல
தாய்மையின் விளக்கம் உன்னிடமே!
கருவை சுமந்த நாள் முதலே – உன்
உருவம் காணத் துடித்திருந்தேன்!
பனிக்குடம் உடைத்து பிறப்பித்தாய் – நல்ல
தாய்மொழி அறிய கற்பித்தாய்!
நெஞ்சில் பதிந்த கல்வெட்டு – உந்தன்
நேசம் பொதிந்த தாலாட்டு!
இறைவனை நினைத்துப் பார்த்ததில்லை – உன்
இணையடி நிகர்க்கு ஏதுமில்லை!