அன்பில் மிகவும் சிறந்தவள் தாய்
பண்பில் மிகவும் உயர்ந்தவள் தாய்
தன்பால் கொடுத்து வளர்ப்பவள் தாய்
அன்பால் அனைவரையும் காப்பவள் தாய்
தாயினும் சிறந்த தெய்வம் இல்லை
தாய்தான் உயர்ந்த அன்பின் எல்லை
தாயின்றேல் மக்கள் படுவர் தொல்லை
தாயிருக்கும் போது குறையேதும் இல்லை
தாயை முதலில் குறிப்பிடும் வேதம்
தாயே உலகில் நடமாடும் தெய்வம்
தாய்தான் நமக்கு முன்னறி தெய்வம்
நோயின்றி நம்மைக் காக்கும் தெய்வம்
தாய் என்று சொன்னாலே அன்பும்
தாய்மை சுமையாக கருதா சுகமும்
தாயானவள் தான் பசித்த போதும் – தன்
சேய்களுக்கு புசிக்கத் தரும் தெய்வம்
தாயின் கருணைக்குத்தான் அளவுண்டோ !
தாயின் அருமைக்குத்தான் ஆதரவுண்டோ !
தாயின் கருவறைக்குத்தான் இணையுண்டோ !
தாயின் பெருமைக்குத்தான் ஈடுண்டோ !
தாய்சொல் தட்டாத தெய்வம் இராமன்
தாயிடம் கட்டுண்ட தெய்வம் கண்ணன்.
தாயைத் தெய்வமெனக் கொண்டாடுவோம் (இந்திய)
தாயை எப்போதும் நாம் வணங்கிடுவோம்
தாய் தெய்வம் அதனால் தான் பல தாய்மார்கள் இன்றைக்கு கோவில் வாசலில் பிச்சை பாத்திரம் ஏந்தும் நிலமையில்; இது போல 1000 கவிதைகள் படித்தாலும் பாசம் மட்டும் மனதில்; நிஜத்தில்; நேசம் ???
தாயைப் பற்றி ஆணித்தரமாக உரைத்தாய்
இதயத்தில் பதிய வைத்தாய்
உள்ளத்தை நெகிழ வைத்தாய்
ஒரு சந்தேகம் நான் பிறருக்கு இதே போல் தமிழில் அனுப்ப என்ன செய்ய வேண்டும்
அன்புடன்
ஜயந்தி நகரஜன்
true love does not change. that is mother love
னல்ல சிந்தனை. பென்ன்மை வாழ்க என்ட்ரு குத்தீடுவொமட என்ட்ர வழியில் உஙல் முயர்சி. பாரடுக்கல்