தயிர் வடை

தேவையானவை:

உளுத்தம் பருப்பு – 1 ½ கோப்பை
புளிப்பில்லாத தயிர் – 1 லிட்டர்
சீரகம் – 1 தேக்கரண்டி
கடுகு – ½ தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
கேரட் துருவல் – தேவையான அளவு
இஞ்சி – 1 சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 4
கொத்தமல்லி – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில், உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு தண்ணீரை வடித்து, கெட்டியாக அரைத்து உப்புச் சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
பாதி கொத்தமல்லித் தழையைப் பொடியாக நறுக்கி மாவில் சேருங்கள்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி, சூடானதும் மாவைச் சிறிய வடைகளாகத் தட்டிப் போட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
மற்றொரு கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துத் தாளித்து ஆற வைக்க வேண்டும்.
பிறகு, அதை உப்புச் சேர்த்த தயிருடன் கலக்க வேண்டும். இந்தத் தயிர்க் கலவையில் நறுக்கிய கொத்துமல்லித்தழை, கறிவேப்பிலை, ஆறிய வடைகள் ஆகியவற்றைப் போட்டு 30 நிமிடங்கள் ஊற வையுங்கள்.
சுவையான தயிர் வடை தயார்!
பரிமாறும்போது ஒவ்வொரு வடையின் மேலும் சிறிதளவு கேரட் துருவல் தூவிப் பரிமாறலாம்.

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author