தேவையான பொருட்கள் :
வறுத்த சேமியா – 1 கப்,
புளிக்காத தயிர் – 2 கப்,
பச்சை மிளகாய் – 1,
நறுக்கிய கொத்தமல்லிக்கீரை – 3 டீஸ்பூன்,
கொட்டையில்லாத திராட்சை – 10,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
1.சேமியாவை வேக வைத்து வடிகட்டி வைக்கவும்.
2.சேமியா ஆறியதும் தயிர் சேர்க்கவும்.
3.உப்பு, கொத்தமல்லிக்கீரை, திராட்சை, நறுக்கிய மிளகாய் சேர்க்கவும்.
4.பச்சை மிளகாய்க்குப் பதிலாக ஒரு மோர்மிளகாயை வறுத்தும் சேர்க்கலாம்..
சுவையான தயிர் சேமியா தயார்.”
கவிதா,
ஒரு டைப்பா இருக்கே!!! செஞ்சு பார்க்கலாமா?
வீட்டுல உள்ளவங்க திட்டுற மாதிரி ஆயிடுமா?!
தைரியமா செஞ்சு பாருங்ணா..நான் கேரண்டி!
🙂
நீங்க சொன்னா சரிதானுங்கண்ணா..
செஞ்சு பார்த்தாச்சு… நல்லாத்தான் இருக்கு!!
ரொம்ப நன்னா இருக்கு சுவயும் நன்னா இருக்கு விரைவில் பன்னலாம்
ரொம்ப சந்தொஷம்