இலட்டுவடை அதிரசம் சீடை முறுக்கல்வா
இனியபணி யாரத்துடன்
இரவைஉப்பு மாபோளி கேசரிகிச் சடிகருப்
பட்டிமிட் டாய்பூந்தியும்
இட்டலிசட் டினிசாம்பார் மிளகாய்ப் பொடிசீனி
இளக்கிய பசு நெய்யுமூற்றி
இளஞ் சூட்டி லேதோசை வெங்காய ஊத்தப்பம்
இன்னபிற பண்டங்களும்
கட்டிப் பருப்போடு காய்கறிகளுடன் குழம்பு
காரவடை பொரியல் கூட்டும்
கையேந்திப் பருகரசம் கட்டித் தயிர்மோரும்
துவையல் நறும் ஊறுகாய்களும்
வட்டில் நிறையபெரும் பசியோடுண் டாலுமின்
வண்டமிழ்ச் சுவையாகுமோ
வகைதொகையாய் இலக்கியமும் வரையான இலக்கணமும்
வளர்தமிழின் சுவை கூட்டுமே !
தமிழ்ச்சுவை”ங்ற பாக்ஸ்ல என்னதான் இருக்கும்னு ஓப்பன் பண்ணி பார்த்தா,
அதில விதவிதமா சாப்பாட்டு ஐடம்ஸ். அசந்து போயிட்டேன். இதை நான் தெரியாத்தனமா பசிக்கிற நேரத்தில பார்த்துட்டேன்.
பாலு சார்..ஒரு சின்ன வேண்டுகோள் : அடுத்த முறை கவிதை எழுதும்போது இதில ஒரு பார்சலையும் சேர்த்து அனுப்பினா நல்லாயிருக்கும்.”
பாலு சார்!
பெயரை இப்படியே சொல்லலாமா? தங்களுக்கு கவிதையும் எ௯ழுத வருமோ?
நான் பொதுவா கவிதை பக்கம் போறதே இல்ல. என்னை உள்ளே போக வச்சது தமிழ்ச்சுவை”ங்ற டைட்டில்தான். படிச்ச பிறகு கவிதையும் பிடிச்சிருக்கு. கவிதையின் நடை ரொம்ப அழகாயிருக்கு… தொடர்ந்து எழுதி, “தமிழ்ச்சுவை”யை மெருகூட்டிட்டே வாங்க. வாழ்த்துக்கள்!..
“
பலகாரங்களின் சுவைகூட அவை எழுதப்பட்ட தமிழால் இன்னும் சுவை கூடி முன்னிலும் ருசிக்கின்றன. அருமையான கவிதை!
ராஜி, கீதா, உங்களின் பாராட்டுக்கு மிகவும் நன்றி! பலகாரங்களுக்கு, தமிழால் சுவை கூடியுள்ளதால் கவிதை வாயிலாய்ப் பலகாரங்களை உண்டு மகிழுங்கள். சுவையின் ஈர்ப்பால் நீங்களும் கவிபாடலமே! -பாலு