தேவையான பொருட்கள்
பழுத்த தக்காளி 1/2 கிலோ
சர்க்கரை 1/2 கிலோ
ஏலப்பொடி 2 டீஸ்பூன்
நெய் 2 டீஸ்பூன்
முந்திரி ( சிறிது சிறிதாக ஒடித்தது) 100 கிராம்
காய்ந்த திராட்சை (புளிப்பு இல்லாதது )50 கிராம்
பழுத்த வாழைப்பழம் (கற்பூரவல்லி/மலைப்பழம்)
அன்னாசி சிறு துண்டுகள் 2 டீஸ்பூன்
சீட்லெஸ் திராட்சை 2 டீஸ்பூன்
செர்ரி 2 டீஸ்பூன்
செய்முறை
தக்காளியை நறுக்கிக்கொண்டு மிக்ஸியில் மையாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் அரைத்ததை அடிகனமான பாத்திரத்தில்
கொட்டி மிதமான தீயில் வைத்து அடிக்கடி கிளறி விடவும். அது பாதியாக குறைந்ததும் சர்க்கரையைப் போட்டு கிளறவும். சிறிது நேரத்தில் அவை ஒன்று சேர்ந்து கெட்டியாகி வரும், அப்போது நெய் ஊற்றி ஏலப்பொடி போட்டு அடுப்பை அணைத்து விடவும். நன்கு ஆறிய பின்பு வேறு பாத்திரத்தில் கொட்டி ஒடித்து வைத்திருக்கும் முந்திரி, திராட்சை,செர்ரி, நறுக்கி வைத்திருக்கும் பழங்கள் ஆகியவற்றைச் சேர்த்து கலந்து பிரிட்ஜ்ஜில் வைத்து பரிமாறவும்.
இவைத் தவிர ஆப்பிள்,கொய்யா, பப்பாளி ஆகிய பழங்களையும் சேர்க்கலாம். பச்சடியின் அளவிற்கு ஏற்ப பழங்கள் போட வேண்டும். பயன்படுத்தும் பழங்கள் புளிக்காமல் நன்கு பழுத்திருக்க வேண்டும்.
இதைப்போலவே பீட்ரூட்டிலும் பச்சடி செய்யலாம்.பீட்ரூட்டை வேக வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.”