ஜோதிடம் கேளுங்கள்

கல்வியும், எதிர்கால வாழ்க்கையும் எப்படி இருக்கும்? எனக்கு செவ்வாய் லக்கனத்தில் இருக்கிறது. என் காதலருக்கு லக்கனத்தில் செவ்வாய் இல்லை. அது திருமனத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுத்துமா? – தக்ஷணா, இலங்கை

அன்பு நிலாச்சாரல் வாசகி தக்ஷணா அவர்களே !

20 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ஹஸ்தம், ராசி கன்னி, லக்னம் ரிஷபம் ஆகும். தங்களின் ஜாதகத்தில் 3-ல் இருக்கும் குரு, 7, 9, 11 ஆகிய வீடுகளைப் பார்ப்பதால், வாழ்க்கை நன்றாக இருக்கும். 5-ல் இருக்கும் புதன், சந்திரன், சுக்ரன் ஆகிய மூவரும் சனியின் 10-ம் பார்வையைப் பெறுவதால், மனக் குழப்பத்திற்கு இடம் தராமல் கவனமாகப் படித்தால், கல்வி கரும்பாக இனிக்கும். தங்களின் ஜாதகத்தில். செவ்வாய் லக்னத்தில் இருப்பது, திருமணத்தில் பாதிப்பு ஏற்படுத்தாது. தங்களுக்கு வளமான வாழ்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்

**************

எனது கணவரும் நானும் ஐந்து வருடங்களாகப் பிரிந்தே உள்ளோம். அவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். எப்பொழுது சேர்வோம்? – ஷீலா பிரேம குமாரி

அன்பு நிலாச்சாரல் வாசகி ஷீலா பிரேம குமாரி அவர்களே !

48 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அசுவினி, ராசி மேஷம், லக்னம் கன்னி ஆகும். மே மாதம் மேஷ ராசிக்கு இடம் மாறி அங்கு சுமார் ஒரு வருடம் தங்கும் குரு பகவான், தங்களின் ராசியில் சந்திரனுடன் அமர்ந்து 7-ம் பார்வையாக 2-ம் வீட்டைப் பார்ப்பதால், 2011 ஆண்டு முடிவிற்குள் தாங்கள் தங்களின் கணவரோடு சேர்ந்து வாழ குரு பகவன் துணை புரிவார். தங்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள் .

**************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author