ஜோதிடம் கேளுங்கள்

திருமணம் எப்போது நடக்கும்? திருமண சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும்? – பாரதி, திருச்சி.

அன்பு நிலாச்சாரல் வாசகி பாரதி அவர்களே !

24 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மூலம், ராசி தனுசு. லக்னம் துலாம். செப்டம்பர் 2012க்குள் தங்களின் திருமணம் கைக்கூடிவிடும். திருமண சிக்கல் தீர, வெள்ளிக்கிழமை தோறும், துளசியை வழிபட்டு, தீபம் ஏற்றி வரவும். தங்கள் மண வாழ்வு வளமாக இருக்க, நிலாச்சாரலின் வாழ்த்துகள்.

என்னுடைய திருமணம் எப்போது நடக்கும்? – ரமேஷ், மன்னார்குடி.

அன்பு நிலாச்சாரல் வாசகர் ரமேஷ் அவர்களே !

30 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ஆயில்யம், ராசி கடகம்.லக்னம், மிதுனம். தங்களின் ஜாதகப்படி அக்டோபர் 2012க்குள் தங்களின் திருமணம் கைகூடிவிடும். தங்களின் ஜென்ம நட்சத்திரமான ஆயில்யம் வரும் நாளில் பைரவரை வழிபட்டு வரவும். நல்ல திருமண வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

About The Author